செவ்வாய் கிரகத்தின் மீது விண்கற்கள் மோதியதால் மிகப்பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டிருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற 48வது சந்திரன் மற்றும் கிரக
அறிவியல் கருத்தரங்கில் பேசிய ஆராச்சியாளர்கள், சுமார் 300 கோடி
ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் விண்கற்கள் மோதியதில் உருவான
மிகப்பெரிய பள்ளம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விண்கற்கள் மோதலில் செவ்வாயில் இருந்த பெருங்கடல்களில் சுமார் 150 மீட்டர்
உயரமான சுனாமி அலைகள் எழுந்ததாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முக்கிய ஆதாரமான நீர் உள்ளதா என்ற ஆய்வு
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வருகிறது. செவ்வாய் கிரகம் வறண்ட மற்றும்
எதுவும் இல்லாத தரையாக இருக்கும் எனவும் நாசாவின் புகைப்படங்கள்
தெரிவிக்கின்றன.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்திருக்க வேண்டும் எனவும், கடல்
அலைகள் சுனாமியாக கொந்தளிதுள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்கள் அந்தக்
கருத்தரங்கில் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்திருக்க
வாய்ப்புள்ளதால் உயிரினங்கள் வாழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது என்றும்
அவர்கள் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...