தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் நிலவும் ஆள் பற்றாக்குறையால், தேர்வு பணிகளை கண்காணிப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 2ல் துவங்கியது.
இந்த தேர்வில், முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, மாவட்ட வாரியாக இயக்குனர்
மற்றும் இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தேர்வு பணிகள் குறித்த புகார்கள், தேர்வில் பங்கேற்ற
மாணவர் எண்ணிக்கை, தேர்வுக்கு வராதவர்கள் எண்ணிக்கை, காப்பியடித்தோர்
எண்ணிக்கை குறித்த விபரங்களை, மாவட்ட வாரியாக பெற, தேர்வுத்துறைக்கு அரசு
உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் என, இரண்டு
தேர்வுகளிலும், மாவட்டங்களிலிருந்து விபரங்களை பெறுவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து விசாரித்த போது, தேர்வுத்துறை இயக்குனர்
அலுவலகத்தில் போதுமான ஆட்கள் இல்லாததால், தேர்வு பணிகளில் சுணக்கம்
ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது. ஒவ்வொரு ஆண்டும், தேர்வு முடிந்தவுடன்
காப்பியடித்தவர்கள் விபரம், தலைமை
செயலகத்துக்கும், ஊடகங்களுக்கும் வழங்கப்படும். இந்த ஆண்டு ஆள்
பற்றாக்குறையால், தலைமை செயலகத்துக்கு தகவல் அனுப்பவே ஊழியர்கள்
திணறுவதால், ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி துறை தரப்பில், தேர்வுத் துறைக்கு கூடுதல் ஊழியர்களை அனுப்ப
மறுப்பதால், தகவல் சேகரிப்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தேர்வுத் துறை
வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...