அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், எம்.பி.ஏ., படிக்க, கடந்த ஆண்டை
விட, அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அண்ணா பல்கலை இணைப்பு
கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., போன்ற
படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்பில் சேர்வதற்கான டான்செட் தேர்வு,
மார்ச், 25, மற்றும், 26ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவுகள், ஜன., 29
முதல், பிப்., 20 வரை நடந்தன. இதில்
கடந்த ஆண்டை விட, அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.எம்.பி.ஏ., படிப்புக்கு,
17 ஆயிரத்து, 992; எம்.சி.ஏ., 6,448; எம்.இ., - எம்.டெக்., படிக்க, 16
ஆயிரத்து, 742 பேர் என, மொத்தம், 41 ஆயிரத்து, 182 பேர் தேர்வுக்கு
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு, 39 ஆயிரத்து, 930 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, அண்ணா பல்கலையின் டான்செட் இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்யலாம் என, டான்செட் செயலர் பேராசிரியர், மல்லிகா
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...