"நம்மள பார்த்தா இவனுங்களுக்கு எப்புடி தெரியுதோ.?
சமீபத்தில் வெளியான புதிய வாட்ஸ்ஆப்
ஸ்டேட்டஸ் அப்டேட் பெரும்பாலான பயனர்களால் வெறுக்கப்படும் (அல்லது
ஏற்றுக்கொள்ளப்படாத) நிலையில் வாட்ஸ்ஆப் அதன் அடுத்த அப்டேட் சார்ந்த
வேளைகளில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
"ஒன்னு விட்டா அப்டேட்ஸ்-ஆ விட்டு
தள்ளுறானுங்க.. இல்லனா ஒரு அப்டேட்டும் விட மாட்றானுங்க.. நம்மள பார்த்தா
இவனுங்களுக்கு எப்புடி தெரியுதோ.?" என்ற உங்களின் அதே ஆதங்கம்
எங்களுக்குள்ளும் உள்ளது. இருந்தாலும் புது ஸ்டேட்டஸ் அப்டேட் போல்
இல்லாமல் வேறு எதாவது சூப்பர் அம்சம் வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்படுமோ என்ற
ஆர்வத்தில் ஆராய்ந்ததில் எங்களுக்கு கிடைத்த அத்துனை தகவல்களையும் இதோ
உங்களிடம் தருகிறோம்.!
பகிர்ந்து கொள்ளும் அம்சம்
வாட்ஸ்ஆப் அதன் விண்டோஸ் ஆப் பீட்டா
பயணர்களுக்கான புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. பீட்டா பதிப்பு
2.17.86 வரையிலாக குறிப்பிட்ட சாட் சார்ந்த பல தகவல்களை பகிர்ந்து கொள்ளும்
அம்சம் அறிமுகமாகியுள்ளது.
'சைஸ்' டாப்
அதாவது குறிப்பிட்ட தனிப்பட்ட சாட்டில் உள்ள
மீடியா எண்ணிக்கை உடன் மேலும் பல தகவல்களை இந்த புதிய அம்சம் வழங்குகிறது.
உடன் 'சைஸ்' டாப் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்பேஸ்
அந்த சைஸ் டாப் அனைத்து ஒரு குறிப்பிட்ட சாட் ஆனது
அதிக அளவிலான ஸ்பேஸ்தனை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதை வெளிப்படுத்தும்
மற்றும் எந்த சாட் சேமிப்பை குறைவான அளவில் எடுத்து கொண்டுள்ளது என்பதையும்
சைஸ் டாப் வெளிப்படுத்தும். அடிப்படை இந்த புதிய அம்சங்கள் மூலம்
தனிப்பட்ட அரட்டைகள் சார்ந்த விரிவான தகவல்களை நாம் அறிய முடியும் என்பதில்
சந்தேகம் வேண்டாம் உடன் சைஸ் டாப் ஆனது எண்கள் அடிப்படையில் இல்லாமல்
அளவின் அடிப்படையில் மீடியாக்களை வரிசைப்படுத்தும் என்பதும்
குறிப்பிடத்தக்கது. மட்டுமே நிச்சயமாக இந்த புதிய அம்சங்கள் தற்போதைக்கு
பீட்டா பயனர்களுக்கு மட்டுமே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது மற்றும் இந்த
சமீபத்திய பீட்டா மேம்படுத்தல் விண்டோஸ் 10 மொபைல் மற்றும் விண்டோஸ்
போன் 8.1 பயனர்களுக்கு இணக்கமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...