பல்கலைகள், கல்லுாரிகளின் பட்ட சான்றிதழ்களில், ஆதார் எண்
உட்பட பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற வேண்டும்' என, பல்கலை மானியக்குழுவான,
யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், போலி சான்றிழ்கள், போலி அரசாணைகள்,
போலி உத்தரவுகள் மூலம், வேலையில் சேர்வது அதிகரித்துள்ளது. அதேபோல்,
சான்றிதழ்களில் மதிப்பெண் உள்ளிட்ட விபரங்களும் திருத்தப்படுகின்றன. இதை
தடுக்க, ஒவ்வொரு கல்வி நிறுவனமும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்கின்றன.
இந்நிலையில், அனைத்து கல்லுாரி, பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து அனுப்பிய சுற்றறிக்கை: தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேறும் நிலையில், சான்றிதழ்களில் பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்வது அவசியம்.
இந்நிலையில், அனைத்து கல்லுாரி, பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து அனுப்பிய சுற்றறிக்கை: தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேறும் நிலையில், சான்றிதழ்களில் பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்வது அவசியம்.
சான்றிதழ் குறித்த முறைகேடுகளை தவிர்க்கும் வகையில்,
பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள வேண்டும். எனவே, மதிப்பெண் சான்றிதழ், பட்ட
சான்றிதழ் போன்றவற்றில், வாட்டர் மார்க், தனி குறியீடு, ஆதார் எண்,
ஒருங்கிணைந்த சிறப்பு எண் போன்ற பல்வேறு வசதிகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...