முட்டையின் மஞ்சள்கருவில் கோலின் காணப்படுகிறது.
இது, அசிடைல் கோலின் என்னும் நியூரோ டிரான்ஸ்மிட்டரை தயாரிக்கத் தேவைப்படுகிறது. அசிடைல் கோலின் மூளைத் தகவல்களை சேமிக்கவும், நினைவுக்கு கொண்டுவரவும், கவனத்துடன் இருக்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது. அசிடைல் கோலின் பற்றாக்குறை கவனக்குறைவையும்,
ஞாபகமறதியையும் ஏற்படுத்துகிறது.
கொலஸ்ட்ரால் நல்லதா? கெட்டதா? இது அனைவரின் மனதிலும் இருக்கும் கேள்வி. சந்தேகமில்லாமல் மூளை ஆரோக்கியத்துக்கு கொலஸ்ட்ரால் (Saturated Fat) தேவைப்படுகிறது. நரம்பு செல்களைச் சுற்றியுள்ள அடுக்குகளுக்கு கொலஸ்ட்ரால் மிக இன்றியமையாதது. மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் ஹார்மோன்களுக்கு கொலஸ்ட்ரால் தேவையானதே. இத்தகைய கொலஸ்ட்ரால் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ளது.
இதுதவிர, முட்டையில் காணப்படும் DHA என்னும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால், அது நரம்பு செல்களின் இணைப்புகளுக்கு உதவுகிறது. தினமும் சிறுவர்களுக்கு ஒரு முட்டை கொடுப்பது சாலச் சிறந்தது. நல்ல ஆரோக்கியமும், வளர்வதற்கான சத்துகளும் கிடைப்பதாக மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...