உயிர்க்கொல்லி நோயான எச்.ஐ.வி-யை முழுமையாக குணப்படுத்துவதற்கு மருந்து
இல்லையென்றாலும், வாழ்நாளை நீட்டிக்கத் தேவையான மருந்துகள் இருக்கின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் பல மக்கள் எய்ட்ஸ் நோயுடன் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்குத் தேவைப்படும் 'லொபினாவிர்' என்ற மருந்தை (சிரப்) தயாரிக்கும் சிப்லா நிறுவனம் இந்தியாவில் அந்த மருந்து தயாரிப்பையும் விநியோகத்தையும் நிறுத்தியுள்ளது.
இந்திய அரசாங்கம் சிப்லா நிறுவனத்துக்குத் தரவேண்டிய மீதிப் பணத்தை பல ஆண்டுகளாக தராமல் இழுத்தடிப்பதால், இந்தியாவில் 'லொபினாவிர்' மருந்து தயாரிப்பதையும் விநியோகிப்பதையும் சிப்லா நிறுவனம் நிறுத்தியுள்ளது. மீதிப் பணத்தை தரும் வரைக்கும் தங்களது முடிவிலிருந்து மாற மாட்டோம் என சிப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் சிப்லாவுக்கான தொகையைச் செலுத்தி, தங்களுக்கு அந்த மருந்தை கிடைக்கச்செய்ய வேண்டுமெனக் கோரி, 3 வயதிலிருந்து 19 வயது வரையிலான, எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட 637 குழந்தைகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘இது, எங்கள் உயிர் பிரச்னை. தயவுகூர்ந்து எங்களுக்கு உதவுங்கள்’ என்று குழந்தைகள் உருக்கமான கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சக கூடுதல் செயலாளர் அருண் பாண்டா கூறுகையில், ‘உள்ளூர் சந்தை சில்லரை விற்பனையாளர்களிடம் இருந்து இந்த மருந்தை கொள்முதல் செய்யுமாறு ஒவ்வொரு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
சிப்லா நிறுவனம் இந்த மருந்தின் உற்பத்தியை நிறுத்தியிருப்பதால் இந்த மருந்து சில்லரை விற்பனையாளர்களிடம் கிடைப்பதில்லை. நாட்டில் வேறு எந்த நிறுவனமும் இந்த மருந்தை தயாரிக்கவில்லை. ஒரே ஒரு தயாரிப்பாளருமான சிப்லா நிறுவனம் இதை நிறுத்திவிட்டநிலையில் இதை எப்படி சில்லரை விற்பனையாளர்களிடம் வாங்க முடியும் என மாநில அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...