சென்னை : மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தில் 132 காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
கன்சல்டன்ட், ஸ்டேட் புராஜெக்ட் அட்மினிஸ்ட்ரேட்டர், ஆபீஸ் அசிஸ்டன்ட்,
அக்கவுண்ட் அசிஸ்டன்ட், மெஸஞ்சர் கம் டிரைவர், டிஸ்பேட்ஜர் போன்ற
பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்படுள்ளது. இவை ஒப்பந்த
அடிப்படையிலான பணிகள் ஆகும்.
ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு 12 காலியிடங்கள் உள்ளன. மாதச்சம்பளம் ரூ. 35000/-
அக்கவுண்ட் அசிஸ்டன்ட் பணிக்கு 12 காலியிடங்கள் உள்ளன. மாதச்சம்பளம் ரூ. 35000/-
மெஸஞ்சர் கம் டிரைவர் பணிக்கு 12 காலியிடங்கள் உள்ளன. மாதச் சம்பளம் ரூ. 25000/-
கன்சல்டன்ட், ஸ்டேட் புராஜெக்ட் அட்மினிஸ்ட்ரேட்டர் போன்ற பணிக்கு மீதமுள்ள 96 காலியிடங்கள் நிரப்பப்படும்.
வயது வரம்பு -
அட்மினிஸ்ட்ரேட்டர் பணிக்கு விண்ண
ப்பிக்க விரும்புபவர்கள் 60 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
மற்ற பணிகளுக்கு 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம் - டெல்லி
கல்வித் தகுதி -
ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும்
ஒரு பட்டப்படிப்பினை பயின்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான
தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.
அக்கவுண்ட் அசிஸ்டன்ட் பணிக்கு - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில்
பி.காம் பட்டப்படிப்பில் 50% மார்க் எடுத்து தேர்ச்சிப் பெற்றிருக்க
வேண்டும். அல்லது அதற்கு இணையான தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.
மெஸஞ்சர் கம் டிரைவர் பணிக்கு - செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
(கமர்சியல்) வைத்திருக்க வேண்டும். அது அரசு அங்கீகரித்த நிறுவனத்தில்
எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் - அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் ஏதும் கிடையாது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை - விண்ணப்பதாரர்கள் குரூப் டிஸ்கசன் மற்றும் நேர்க்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு www.edcilindia.co.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...