அன்றாட உணவுப் பழக்கத்தில் நல்ல கொழுப்புகளை
அடிக்கடி சேர்த்து வந்தால், அவை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற
நோய்களை தடுக்கும் என அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலையைச் சேர்ந்த
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நாம் உண்ணும் உணவில் எல்.டி.எல் என்றழைக்கப்படும் கெட்ட வகை கொழுப்புகளும். எச்.டி.எல் எனப்படும் நல்ல வகைக் கொழுப்புகளும் உள்ளன. நம்மில் பெரும்பாலோர் பயத்தின் காரணமாக நல்ல வகை கொழுப்புகளையும் தவிர்த்து விடுகிறோம். இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்னைகளுக்கு கெட்ட வகை கொழுப்பு மட்டுமே காரணமாக அமைகின்றன. கெட்டவகை கொழுப்புகள் இருதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பை உருவாக்கி நாளடைவில் மாரடைப்பை ஏற்படுத்துகின்றன. நல்ல வகைக் கொழுப்புகள் அந்த அடைப்பை கரைத்து மாரடைப்பு, பககவாதம் போன்ற நோய்கள் வராமல் தடுப்பதாக அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலை விஞ்ஞானிகள் சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்
நிறைவுறாத கொழுப்பு அமிலங்களை கொண்டவை நல்ல
வகை கொழுப்புகளாக கண்டறியப்பட்டுள்ளன. வேர்க்கடலை, பாதாம் பருப்பு,
முந்திரி பருப்பு போன்றவை இதற்கு உதாரணமாக கூறலாம். ஆனால் நிறைவுற்ற
கொழுப்பு அமிலங்களை கொண்ட நெய், முட்டை, மட்டன் போன்றவற்றை அதிகம் சேர்த்து
கொள்ளும் போது கெட்ட வகைக் கொழுப்புகள் நம் உடம்பில் சேர்ந்து விடுகின்றன.
இவை மாரடைப்புககு வழி வகுக்க கூடியவை
அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலை
விஞ்ஞானிகள் 800க்கும் மேற்பட்ட இதய நோயாளிகளிடம் சமீபத்தில் நடத்திய
சோதனையில் அவர்கள் தங்கள் உணவில் நல்லவகைக் கொழுப்புகளை குறைவாக உண்பதை
கண்டறிந்தனர். அவரகள் தங்கள் ஆய்வின் முடிவில் நல்லவைகைக் கொழுப்புகள்
இருதய தமனிகள் மற்றும் மூளை ரத்த குழாய்களில் ஏற்படக் கூடிய கட்டிகளை
கரைத்து மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை தடுக்கும் என கூறியுள்ளனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...