உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கும்வகையில் ஐ.நா.
அமைப்புடன், இந்தியா மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய
அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட பெண்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிப்பதற்கும், தேர்தலில் வெற்றிபெற்ற பெண்களின் திறனை மேம்படுத்துவதற்கும் வகைசெய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐ.நா. மகளிர் சபையுடன் மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கும் வகையிலான சட்ட விதிகளையும், கொள்கைகளையும் வகுத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி என பல்வேறு நடவடிக்கைகளை ஐ.நா. அமைப்பும், இந்தியாவும் இணைந்து நடவடிக்கை எடுக்கும். மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் நடவடிக்கை மற்றும் பொதுஇடங்களில் சமஉரிமை மறுப்பு போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கலந்தாலோசனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஆந்திரம், கர்நாடகம், ஒடிஸா, தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் முதல்கட்டமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...