இந்திய
வனத்துறையில் 2017-18 ஆம் ஆண்டிற்கான பணியிடங்களை நிரப்புவதற்கான இந்திய
வனப் பணி தேர்வுக்கான அறிவிப்பை யூபிஎஸ்சி என அழைக்கப்படும் மத்திய மத்திய
குடிமைப் பணிகள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த
காலியிடங்கள்: 110 பணி: Indian Forest Service Examination தகுதி: கால்நடை
பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல்,
புவியமைப்பியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் அல்லது
விவசாயம், வனவியல் அல்லது பொறியியல் துறைகளில் பட்டம் பெற்றவர்கள்
விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 21 - 32க்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின்
மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையம்: தமிழகத்தில்
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, புதுச்சேரி விண்ணப்பக் கட்டணம்: பொது
மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டணம்
செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான
கடைசி தேதி: 17.03.2017 எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.upsc.gov.in/sites/default/files/Engl_IFS_2017_0.pdf என்ற
இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...