சண்டிகரில் நிலத்தை கையகப்படுத்தியதற்கு இழப்பீடாக ரயிலை வைத்துக்கொள்ளுங்கள் என, விவசாயிக்கு சாதகமாக லூதியானா நீதியரசர் தீர்ப்பு வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு ஜலந்தர் அருகிலுள்ள கனடா கிராமத்தில் ரயில் நிலையம் அமைக்க விவசாயி சம்பூரன் சிங் என்பவரது நிலத்தை ரயில்வே துறை கையகப்படுத்தியுள்ளது. அதனால் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி லூதியானா நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த வழக்குக்கு நீதியரசர் விவசாயிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என இந்தியன் ரயில்வேக்கு உத்தரவிட்டது. பின்னர், ரூ.25 லட்சத்தை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டது. ஆனால் சம்பூரன் சிங் தனக்கு ரூ.1.47 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவர் கேட்டபடியே நீதிபதியும் ரூ.1.47 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். ஆனால் ரயில்வே துறை விவசாயிக்கு வெறும் ரூ.42 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளது.
இதனால் சம்பூரன் மறுபடியும் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த மனு நேற்று முன்தினம் நீதிபதி ஜஸ்பால் வர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமிர்தசரசுக்கும், டெல்லிக்கும் இடையில் ஒடும் ஸ்வர்ணா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை சம்பூரனிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் லூதியானா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டராக நியமனம் செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார்.
நீதியரசர் வழங்கிய உத்தரவுடன் வழக்கறிஞர் ராகேஷ் காந்தியும், சம்பூரன் சிங்கும் ரயில் நிலையத்துக்கு வந்தனர். உத்தரவை ரயில் டிரைவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து ரயில்வே மேலாளர் அனுஜ் பிரகாஷ் கூறுகையில், விவசாயிக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான பிரச்னையில் சிக்கல் இருந்தது. தற்போது அது தீர்க்கப்பட்டுவிட்டது. இதுபோன்ற உத்தரவுகளை வழக்கமாக சட்ட அமைச்சகம் ஆய்வு செய்யும். மனுதாரர் 300 மீட்டர் நீளமுள்ள ரயிலை வைத்து என்ன செய்யப் போகிறார்? ரயிலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியுமா என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதிபதிகள் நுதன மற்றும் வினோத தீர்ப்பு வழங்குவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்தத் தீர்ப்பு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...