வாட்ஸ் ஆப்பில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும் வசதியை தொடங்க உள்ளதாக இத்தாலியைச் சேர்ந்த பிரபல நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று சமூக வலைதளங்களில் பிரபலமான வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தாத இளைஞர்கள் யாரும் இல்லை. வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதற்காகவே ஸ்மார்ட்போன் வாங்குபவர்களும் உண்டு. அந்த வகையில், இந்தியாவில் மட்டும் 20 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட வாட்ஸ் ஆப்பில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக யூக்ஸ் நெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிலன் நகரைச் சேர்ந்த யூக்ஸ் நெட் நிறுவனம், ஆடம்பர பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், வாட்ஸ் ஆப் மூலம் தங்கள் நிறுவன பொருட்களை விற்கும் வசதியை ஏற்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் தங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஃபெடரிகோ மார்செட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் ஆப் பாஃர் பிசினஸ் என பெயரிடப்பட்ட இந்த புதிய வசதி, இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, விரைவில் செயல்படுத்தப்படும் என வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் இணை நிறுவனரான பிரையன் ஆக்டன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...