Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னை குடிநீரில் கழிவுநீர் - பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை!

கொரட்டூர் ஏரியின் எல்லையை வரையறுக்கவும், ஏரியில் கழிவுநீரை திறந்துவிட்ட லாரிகளை சிறை வைக்கவும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நகரையொட்டி 850 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கொரட்டூர் ஏரி. 1970ஆம் ஆண்டுகளில் இந்த
ஏரியை அப்பகுதியை சுற்றியுள்ள அக்ரகாரம், எல்லை அம்மன் நகர், சாரதா நகர், கண்டிகை, சீனிவாசபுரம், காந்தி நகர் உள்பட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் சமீபகாலமாக ஏரியில் கழிவுநீர் கொட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. இதையடுத்து அப்பகுதி குடியிருப்பு நல விழிப்புணர்வு அறக்கட்டளை நிர்வாகி சேகரன், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் இதுகுறித்து சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட 21 அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பதிலளிக்கவும், ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தவும் மேலும் கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஆவின் நிறுவனம் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

இப்படி தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையிலும், சில நாள்களுக்கு முன்பு டேங்கர் லாரியில் கொண்டுவரப்பட்ட கழிவுநீர் ஏரியில் திறந்துவிடப்பட்டது.

இதற்கிடையில், இது தொடர்பான வழக்கு பசுமைத் தீர்ப்பாய நீதிபதி பி.ஜோதிமணி, உறுப்பினர் பி.எஸ்.ராவ் அடங்கிய அமர்வுமுன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவின் நிறுவனம் சார்பில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க புதிய சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் திறந்துவிட்ட டேங்கர் லாரியைப் பிடிக்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முறையிடப்பட்டது.

கொரட்டூர் ஏரியின் பரப்பளவை கணக்கிட்டு, தமிழக பொதுப்பணித் துறை அறிக்கையளிக்க வேண்டும். அத்துடன், கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் திறந்துவிட்ட தனியார் லாரிகளை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சிறைப் பிடிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் குடிநீரில் கழிவுநீரை கலந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பசுமை சுற்றுச்சூழல் திட்டத்தின்கீழ் கொரட்டூர், ரெட்டேரி, அம்பத்தூர் ஆகிய 3 ஏரிகளும் படகுசவாரி, நடைபயிற்சி வளாகத்துடன் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்படும் என்று, கடந்த 2015ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ரூ.20 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 ஏரிகளிலும் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கின. ஆனால் அந்த ஆண்டு ஏற்பட்ட மழை-வெள்ள பாதிப்பால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive