சென்னையைச் சேர்ந்த நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் பிடிவாரண்ட்
பிறப்பித்துள்ளநிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆணை
பிறப்பிப்பேன் என்று நீதிபதி கர்ணன் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஆணை பிறப்பிப்பேன் என்று கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் அதிரடியாகக் கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், கடந்த ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு கூறியதோடு பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், இதை நீதிமன்ற அவமதிப்பு வழக்காகப் பதிவு செய்தது. இதுதொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்க கர்ணனுக்கு உத்தரவிட்டது. நீதிபதி கர்ணன் ஏற்கனவே இரண்டுமுறை நேரில் ஆஜராகாமல் இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இன்றும் கர்ணன் நேரில் ஆஜராகவில்லை. இதனால் உச்சநீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. வருகிற 31ஆம் தேதிக்குள் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது இதுவே முதன்முறையாகும்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆணை பிறப்பிப்பேன். நான் தாழ்த்தப்பட்டவர் என்பதால் என்மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து நான் அளித்த புகார் மீது நடவடிக்கை இல்லை. இதுகுறித்து பிரதமரிடம் புகார் அளித்துள்ளேன் என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...