Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்தியா செயற்கை கோள்கள்: அமெரிக்க உளவுத்துறை கலக்கம்!

இந்தியா ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி நிகழ்த்திய சாதனையால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் செனட் உறுப்பினரான டான் கோட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உளவுத்துறை தலைவராவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுபவர் முன்னாள் செனட் உறுப்பினரான டான் கோட்ஸ். செவ்வாய்க்கிழமையன்று
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே ராக்கெட்டில் இந்தியா 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது என்ற செய்தியை செய்தித்தாள்களில் பார்த்து தான் அதிர்ச்சியடைந்துவிட்டதாக தெரிவித்தார்.

சிறிய அளவிலான 100-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் ஒரே ராக்கெட்டில் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவர், அமெரிக்கா பின் தங்கி வருவதை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முக்கிய உளவுத்துறையான சி.ஐ.ஏ-விற்கு டிரம்ப் பதவி ஏற்ற பின் தலைமை ஏற்கவுள்ளதாக கூறப்படும் ஒருவர், இந்தியா 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதை மறுநாள் செய்தித்தாளில் பார்த்து தான் தெரிந்துக் கொண்டேன் என்று கூறியுள்ளதை பலரும் விமர்சித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 15ம் தேதி இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக் கோள், INS-1A, INS-1B செயற்கைக்கோள்களும், அமெரிக்காவின் 88 செயற்கைகோள்கள் மற்றும் கஜகஸ்தான், நெதர்லாந்து நாட்டு செயற்கை கோள்கள் என மொத்தம் 104 செயற்கைக்கோள்கள் ஒரே ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இந்தியா அனுப்பியுள்ள செயற்கை கோள்கள் புவிசார்ந்த விஷயங்களை ஆராயவும், புவிபரப்பில் நிலவும் கதிர்வீச்சை அளக்கவும் பயன்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இஸ்ரோவின் இந்த முயற்சி வெற்றியடைந்ததன் மூலம் ஒரே ராக்கெட்டில் அதிக செயற்கைகோள்களை ஏவி இந்தியா புதிய உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.ஆசியா கண்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக உருவாகியுள்ள இந்தியா விண்வெளி ஆய்வில் பல புதிய சாதனைகளை அடுத்தடுத்து படைத்து வருகிறது.

2008-ல் சந்திரமண்டலத்தில் கால்பதித்தது, ஆசிய நாடுகளில் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது இந்தியா, 2013-ல் செவ்வாய் கிரகத்திற்கு ‘மங்கல்யான்’ என்ற ஆளில்லா விண்கலத்தை அனுப்பியது. அடுத்தடுத்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கை கோள்கள், ராக்கெட்டுகள், ராக்கெட்டுகளை இயக்கும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிரயோஜனிக் என்ஜின்களை சொந்தமாக உருவாக்கி, விண்வெளி ஆய்வு துறையில் வெற்றிகொடி நாட்டிவரும் இந்தியா, உள்நாட்டு தேவைக்காக மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு சொந்தமான பல்வேறு வகையான செயற்கை கோள்களையும் இங்கிருந்தபடி விண்ணில் செலுத்தி உலக நாடுகளின் கவனத்தை கவர்ந்து வருகிறது.

இந்த புகழ் வரலாற்றின் புதிய அத்தியாயமாக கடந்த 15-ம் தேதி ஒரே ராக்கெட் மூலம் 104 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியதன் வாயிலாக இந்திய விண்வெளித்துறை ஆய்வு மையமான இஸ்ரோ அசுரத்தனமான உலக சாதனை படைத்தது.சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் நமது சாதனையை ஆச்சரியமாகவும், பொறாமை கண்ணோட்டத்துடனும் மூக்கில் விரலை வைத்தபடி பார்த்த அதே வேளையில் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவும் இந்தியாவின் அதிரடியான இந்த சாதனையை கண்டு வியந்து, மலைத்துப் போன தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சாதனையை கண்ட பின்னர் இந்தியாவை விட பின்தங்கி இருக்க கூடாது எனவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் திகைப்பை அந்நாட்டு உளவுத்துறையின் புதிய தலைவராக டொனால்ட் டிரம்ப்பால் அறிவிக்கப்பட்டுள்ள டான் கோட்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஆளும்கட்சி எம்.பி.யாகவும் பதவி வகித்துவரும் டான் கோட்ஸ் பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோது,

‘ஒரே நேரத்தில், ஒரே ராக்கெட் மூலம் 104 ஏவுகணைகளை இந்தியா விண்வெளியில் செலுத்தியது என்ற தகவலை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அவை அளவில் சிறியதாக இருக்கக் கூடும். ஆனால், இதை பார்த்த பின்னரும் நாம் பின்தங்கி இருக்க முடியாது’ என குறிப்பிட்டுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive