'விடுபட்ட குழந்தைகளுக்கு, வீடு
தேடிச்சென்று, ரூபெல்லா - தட்டம்மை தடுப்பூசி போடப்படும்' என, சுகாதாரத்
துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், ஒன்பது மாத குழந்தை முதல், 15 வயது
வரையுள்ள, 1.76 கோடி குழந்தைகளுக்கு, தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடும்
திட்டம், பிப்., 6ல், துவக்கப்பட்டது.
இந்த தடுப்பூசி குறித்து, சமூக வலைதளங்களல், வதந்திகள் பரவியதால், தடுப்பூசி போட மக்கள் தயங்கினர். 'தடுப்பூசி பாதுகாப்பானது; அச்சம் வேண்டாம்' என, தமிழக சுகாதாரத் துறை விளக்கம் அளித்ததோடு, மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தியது. இதையடுத்து, இறுதிநாளாக அறிவிக்கப்பட்ட, மார்ச், 15 வரை, 1.46 கோடி குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. மேலும், 30 லட்சம் குழந்தைகளுக்கு, தடுப்பூசி போட முடியவில்லை.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள்
கூறுகையில், 'மார்ச், 15க்குப்பின், மேலும், 10 லட்சம் குழந்தைகளுக்கு,
தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதம், 20 லட்சம் குழந்தை களின் வீடு தேடிச்
சென்று, தடுப்பூசி போடப்படும்' என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...