தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணக் குழுத்
தலைவரை நியமிக்காத பள்ளிக் கல்வித் துறைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு
நடவடிக்கை கோரிய மனுவில் உரிய எதிர்மனுதாரரைச் சேர்க்க சென்னை உயர்நீதிமன்ற
மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்விக்
கட்டணக் குழு தலைவர் பதவி 9 மாதமாக காலியாக உள்ளது. இதனால் 2016-17 கல்வி
ஆண்டுக்கான கல்விக் கட்டணம் அறிவிக்கப்படவில்லை. எனவே, தனியார் பள்ளிகள்
கல்விக் கட்டணக் குழு தலைவரை நியமித்து உத்தரவிட வேண்டும் என்று மதுரை
ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த பி.கார்த்திக் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்
கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு ஏற்கனெவே விசாரணைக்கு வந்தபோது
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணக் குழுத் தலைவரை விரைவில் நியமிக்க
நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவைப்
பின்பற்றாததால் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சபிதா மீது நீதிமன்ற
அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் மனு
செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அடங்கிய
அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. ஐஏஎஸ் அதிகாரிகள்
மாற்றப்பட்டுள்ள நிலையில் உரிய அதிகாரியை எதிர்மனுதாரராகச் சேர்த்து புதிய
மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...