''ஒவ்வொரு
போட்டியிலும், வென்று விட வேண்டும் என்பதை விட, அதில் செய்த தவறுளை அடுத்த
போட்டியில் தவிர்க்க வேண்டும் என்பதே வெற்றியின் பாதைக்கு வழிகாட்டும்,''
என தடகளத்தில் சாதித்து வரும் மாணவர் ராஜசூர்யா கூறினார்.
சிந்தனை, உடல்நலம், ஒருமுகத்தன்மை என பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்ள விளையாட்டு அவசியம். பள்ளி பருவத்தில் முக்கியத்துவம் பெறும் விளையாட்டுகள், இறுதித்தேர்வுகளோடு முடிவையும் பெறுகின்றன. நீளம் தாண்டுவதிலும், உயரம் தாண்டுவதிலும், தேசிய அளவில் வென்று சாதனை படைக்கும் மாணவர்கள் கூட, அவர்களின் சாதனைக்கு பள்ளி பருவத்தோடு எல்லைக்கோட்டையும் நிர்ணயித்துக்கொள்கின்றனர்.
இன்னும், பலரது திறமைக்கு முடிவாக இருப்பவை பொதுத்தேர்வு வகுப்புகள். விளையாட்டில் எதிர்காலம் இல்லை, என கனவுகளுக்கு தடைபோட்டு கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தி வாழ்க்கையை நடத்துபவர்களையே இன்று பெரும்பான்மையாக காணமுடிகிறது. பிரச்னைகளை கடந்து, விளையாட்டில் வெற்றி வாகை சூட காத்திருக்கும் பட்டியல்கள் ஏராளம்.ஊக்கமும், பயிற்சியும் இருந்தால், திட்டமிட்ட இலக்கை எட்டி விடலாம் என உற்சாகத்தோடு தடகளத்தில் முன்னேறி வருகிறார் ராஜசூர்யா. தற்போது, சீனிவாசா மெட்ரிக் பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறார்.
பொதுத் தேர்வுகளின் இடைவெளியில், விளையாட்டிலும் வெற்றி கொள்ள முயற்சிக்கிறார். தடகளத்தில், 100மீ, 200மீ, மும்முறை தாண்டுதல், நீளம் தாண்டுதல்தான் இவரின் தனித்திறன்கள்.
மாநில அளவில் இரண்டு முறை, மண்டல அளவில் இருபது முறை, வட்டார அளவில் எப்போதும் வெற்றி, என நுாற்றுக்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் இவரின் தடகள ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன.
ராஜசூர்யா கூறியதாவது: பள்ளி பருவத்தில் விளையாட்டில் அனைவருக்கும் ஆர்வம் ஏற்படுகிறது. ஆனால், அதற்கான வடிவம் கிடைக்காமலே பலரும் வெவ்வேறு துறைகளை தேர்ந்தெடுக்கின்றனர்.பள்ளியில் எனக்கு கிடைத்த ஊக்கத்தால், என் திறமையை அடையாளம் காண முடிந்தது. என் அம்மா ஒரு குழு விளையாட்டு வீரர் என்பதால், பெற்றோர், (தந்தை - முருகன், தாய்- அலமேலு) தடகளத்தில் தொடர்ந்து முன்னேற ஊக்குவிக்கின்றனர்.
குழு விளையாட்டுகளுக்கு, தனிப்பட்ட முறையில் சிறந்த பயிற்சியாளர்கள் உள்ளனர். ஆனால், தடகளத்துக்கு, அவ்வாறு தனிப்பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்கள் குறைவுதான். பள்ளிகளில் மட்டுமே உள்ளனர். இதனால், தடகள விளையாட்டுகள் பள்ளி பருவத்தோடு நின்று விடுகின்றன.
எங்களைப்போன்ற ஆர்வமுள்ள பலரும் சர்வதேச அளவில் தடகளத்தில் சாதிக்க, சிறப்பு தனி பயிற்சியாளர்கள் வெளிவர வேண்டும்.ஒவ்வொரு போட்டியிலும், வென்று விட வேண்டும் என்பதை விட, அதில் செய்த தவறுளை அடுத்த போட்டியில் தவிர்க்க வேண்டும் என்பதே வெற்றியின் பாதைக்கு வழிகாட்டும்.
விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கல்லுாரியையே உயர்கல்விக்கும் தேர்ந்தெடுப்பேன். ஒலிம்பிக்கில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்பதே என் இலக்கு. இவ்வாறு, அவர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...