சென்னை சமஸ்கிருத கல்லூரி 100 ஆண்டுகளுக்கு
மேலாக இயங்கி வருகிறது. இந்நிலையில், சென்னை சமஸ்கிருத கல்லூரியின் 111-வது
ஆண்டு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
அப்போது, ஆன்லைனில் சமஸ்கிருதம்
கற்கும் திட்டத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைத்தார்.
அந்த நிகழ்ச்சியில் இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி
உள்ளிட்ட பலர் கொண்டனர்.
இதன் மூலம் அந்த கல்லூரியில் உள்ள அனைத்து
வேதப்பாடங்களையும், இனி ஆன்லைனிலேயே படிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
குறிப்பாக, 'தற்போது, அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. பல்வேறு
மொழிகளும் டிஜிட்டல் கலாசராத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சமஸ்கிருதத்தின் பாரம்பர்யத்தை காக்கவும், அதன் பெருமையை
அனைவரும் தெரிந்து கொள்வதற்காகவும் கல்லூரி டிஜிட்டல் யுகத்துக்குள்
நுழைந்துள்ளது' என கல்லூரி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...