வாகனங்களில் அளவுக்கு அதிக மாக பள்ளி மாணவர்களை ஏற்றிச்
செல்வதை தடுக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி
பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களில்
பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும்
என்பதற்காக, பள்ளி வாகனங்களை இயக்க பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறை யில்
உள்ளன.வாகனங்களில் வேக கட்டுப் பாட்டுக் கருவி பொருத்த வேண் டும். அனுபவம்
வாய்ந்த டிரைவர் கள் பணியமர்த்தப்பட வேண்டும். பாலம், நீர் நிலைகள் போன்ற
இடங்களில் பிற வாகனங்களை முந்திச்செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு
விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட் டுள்ளது.பள்ளிக்கு செல்லும்
வாகனங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு மாணவர்களை
ஏற்றிச்செல்ல வேண்டும்.
இதன்படி ஆட்டோக்களில் 6 மாணவ, மாணவிகள் மட்டுமே ஏற்றிச்செல்ல அனுமதி
உண்டு.இதுதவிர, மாதக் கட்டணத்தில் ஒப்பந்த அடிப்படையில் கார்கள், ஆம்னி
வேன்கள், மேக்ஸிகேப் போன்ற சுற்றுலா வாகனங்களில் பள்ளி மாணவர்களை
ஏற்றிச்செல்லக் கூடாது. இது போக்குவரத்து விதிமுறைகளுக்கு
புறம்பானது.இதனையெல்லாம் மீறி அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்கள் ஏற்றி
செல்லப்படுகின்றனர். மாணவ மாணவியர் நலன் கருதி, போக்குவரத்து போலீசார்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...