Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஓய்வு வயதை உயர்த்துவது இளைஞர்களுக்கு அநீதி ஆட்சிப்பணியாளர் சங்கம் கண்டனம்

மதுரை, :'அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி' என, தமிழ்நாடு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப்பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.மாநில தலைவர் செல்வம் கூறியதாவது:    மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பளக்குழு அமல்படுத்தப்பட்டு விட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக நிதி செலவினம், 15 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட உள்ளது.

வரும் 2017-18 ல் 2.5 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்; அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதி சுமையை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. 
இது அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது, அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும், இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
மாநிலத்தில் 148 அரசு துறைகள் உள்ளன. இதில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 12 லட்சத்து 56 ஆயிரத்து 352.
31.12.16 நிலவரப்படி வேலைவாய்ப்புக் கோரி ஒரு கோடியே 58 லட்சத்து 22 ஆயிரத்து 38 பேர் காத்திருக்கின்றனர். மொத்தம் 148 அரசு துறைகளிலும், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் பத்து ஆண்டுகளாக காலியாக உள்ளன. 
வருவாய்த்துறையில் மட்டும் 50 ஆயிரத்து 557 பணியிடங்களில் 10 ஆயிரத்து 95 பணியிடங்கள், ஊரக வளர்ச்சித்துறையில் 37 ஆயிரத்து 500ல் 4,827 பணியிடங்கள், வணிகவரித்துறையில் 9,732ல் 4,303 பணியிடங்கள், போலீஸ் துறையில் 21 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் 478 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் அரசு ஊழியர் வயதை 60 ஆக உயர்த்துவது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.நிதி பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வழிமுறைகள் அரசின் ஆலோசனையில் உள்ளன. 
அதை நடைமுறைப்படுத்தி, அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களில் படித்த இளைஞர்களை அமர்த்த வேண்டும்.




2 Comments:

  1. ஓய்வு வயது உயர்வை 58 to 60 வரவேற்கிறேன். 2001முதல்2006 வரை யாருக்கும் அரசு வேலை வாய்ப்பு அளிக்க வில்லை. 45 வயதில் அரசு வேலையில் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் குறைந்தது 15 ஆண்டு காலம் வேலை செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. வரவேற்கிறேன்.வயது உயர்வு 58to60 .

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive