Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வு: உத்தேச அட்டவணை தயார்

அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான (2017-18) பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான உத்தேச அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை தயாரித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:



* பொது இடமாறுதலுக்கான விண்ணப்பத்தை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சமர்ப்பித்தல் - மார்ச் 31
* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 21
* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு - மே 22
* அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 23
* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 24
* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 25
* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு - மே 26
* உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 27
* உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 28
* பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 29
* பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 30
* இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பா சிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு - மே 31
உத்தேச காலஅட்டவணையின் படி, இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தொடர்பான பணிகளை மே 31-ம் தேதிக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
 நன்றி:தி இந்து தமிழ்/மார்ச்சு,7, 2017




6 Comments:

  1. SGT transfer district to district date???????Anyone tell pls

    ReplyDelete
  2. effective step,certainly will be appreciated by all.

    ReplyDelete
  3. effective step,certainly will be appreciated by all.

    ReplyDelete
  4. Expecting MUTUAL TRANSFER** from ** MADURAI to ** ARANTHANGI block *** BT social* female* Interested plz ct # 94883 12421

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive