மதுரை: 'பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில் அனைத்து மாணவர்களும்
அதிக மதிப்பெண் பெறும் வகையில் எளிதாக வினாத்தாள் அமைந்திருந்தன,' என
மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மதுரையில் தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்ததாவது:
* சக்திவேல், கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி: அனைத்து வினாக்களும்
எதிர்பார்த்தவை தான். காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் இடம் பெற்ற
பெரும்பாலான வினாக்கள் இடம் பெற்றன. செய்யுளில் மனப்பாடம் பகுதி, உரை
நடையில் ஒரு மதிப்பெண், நெடு வினா பகுதிகள் அடிக்கடி எழுதி பார்த்த
வினாக்கள். அதிக மதிப்பெண் எளிதில் பெறலாம். மகிழ்ச்சியான துவக்கமாக
உள்ளது. * பிரியதர்ஷினி, வண்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளி: எதிர்பார்த்ததை
விட வினாக்கள் மிக எளிமையாக இருந்தன. புக்பேக்கில் இருந்து கேட்கப்பட்டன.
ஒரு மதிப்பெண், குறு மற்றும் நெடு வினா பகுதியில் ஆசிரியர்கள், அடிக்கடி
சுட்டிக் காட்டிய வினாக்கள் தான் இடம் பெற்றன. செய்யுள் பகுதியில்
கேட்கப்பட்ட, திருக்குறள் மற்றும் கலித்தொகை பாடல்கள் அடிக்கடி எழுதிப்
பழகியவை. 'புளூ பிரின்ட்' படி வினாக்கள் இடம் பெற்றாலும் கடினமான வினா
எதுவும் இல்லை.* முகேஷ் கிருஷ்ணன், எம்.ஆர்.ஆர்., எம்.ஏ.வி.எம்.எம்.,
பள்ளி: கடந்த பொதுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட பெரும்பாலான வினாக்கள் இந்த
தேர்விலும் இடம் பெற்றன. வகுப்புகளில் அடிக்கடி எழுதிப் பார்த்த வினாக்கள்
வந்திருந்தன. ஒரு மதிப்பெண் பகுதியில் அனைத்தும் நேரடி வினாக்கள் தான் இடம்
பெற்றன. நெடுவினா பகுதியிலும் 'சாய்ஸ்' உடன் அனைத்தும் தெரிந்த வினாக்களே
இடம் பெற்றன. தேர்வு ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது.
* பாரதி, தமிழாசிரியை, கே.கே. உயர்நிலை பள்ளி, அண்ணாநகர்: செய்யுளில் 55
மதிப்பெண்ணிற்கும் உரைநடையில் 45 மதிப் பெண்ணிற்கும் வினாக்கள் இடம்
பெற்றன. இரண்டு பகுதியிலும் 'புளூபிரின்ட்' அடிப்படையில் 'புக்பேக்'
வினாக்கள் மட்டுமே இடம் பெற்றன. மனப்பாடப் பகுதியில் கேட்கப்பட்ட
திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்ற பாடல்கள் அடிக்கடி
மாணவர் எழுதி பழகியவை. உரைநடை மற்றும் செய் யுளில் முதல் பாடங்களில்
இருந்து 16 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் வந்துள்ளன. பாடல் கொடுத்து வினாக்கள்
இடம் பெறும் ஐந்து மதிப்பெண் பகுதியில், மாணவர் எதிர்பார்த்த 'தமிழ் விடு
துாது' செய்யுளில் இருந்தே கேட்கப்பட்டது. அனைத்தும் எளிது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...