ஜன்தன் கணக்குகளை பராமரிக்கவே குறைந்தபட்ச வைப்பு தொகையை பராமரிக்காத வங்கி கணக்குகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
மும்பை: 10 கோடி ஜன்தன் கணக்குகளை பராமரிக்க பெரும் செலவாகிறது
எனவே அதனை ஈடுகட்டவே குறைந்தபட்ச வைப்பு தொகையை பராமரிக்காத வங்கி கணக்குகளுக்கு அபராதம்
விதிக்க முடிவு செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா விளக்கமளித்துள்ளார்.
வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும்
என்றும் அப்படி இல்லை என்றால் ஏப்ரல் 1 முதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஸ்டேட்
பாங்க் ஆப் இந்தியா வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை எஸ்பிஐ வங்கி
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மெட்ரோ நகரங்களில் உள்ள வங்கி கணக்குகளில் 5,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாக குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 75 ரூபாயும், 75 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்புத் தொகை இருந்தால் 100 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும்.
அதேபோல் நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்சமாக 3 ஆயிரம் ரூபாயும், கணக்கில் இருப்பு வைத்திருக்க வேண்டும். புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் 2 ஆயிரம் ரூபாயும், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் ஆயிரம் ரூபாயும் கணக்கில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் எஸ்.பி.ஐ குறிப்பிட்டுள்ளது. குறைந்தபட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்க உள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற பெண்கள் தொழில் முனைவோர் தேசிய மாநாட்டில் பேசிய எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, 10 கோடி ஜன்தன் வங்கி கணக்குகளை பராமரிக்க அதிகம் செலவாகிறது. எனவே அதனை ஈடுகட்டவே குறைந்தபட்ச வைப்பு தொகையை பராமரிக்காத வங்கி கணக்குகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஜன்தன் கணக்குகளுக்கு இந்த அபராத தொகை பொருந்தாது எனவும் அவர் கூறியுள்ளார்.
Adukku nangathaan kedachoma
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteASK janthan account holder keep minimum balance my dr sbi .
ReplyDeleteASK janthan account holder keep minimum balance my dr sbi .
ReplyDelete