ஓசூர் தனியார் பள்ளி மாணவர், 'சைலன்ட் ஹார்ட் அட்டாக்'கை கண்டறியும் புதிய கருவியை கண்டறிந்து, ஜனாதிபதியிடம் விருது பெற்றுள்ளார்.
ஓசூரை சேர்ந்தவர் மனோஜ். டூ - வீலர் மற்றும் கார் டீலரான இவருக்கு, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன், ஆகாஷ் மனோஜ், 15, ஓசூர், அசோக் லேலண்ட் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
தேசிய விருது : கடந்த, மூன்று ஆண்டு களாக அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து வரும் ஆகாஷ் மனோஜ், இரவில் துாங்கும் போது ஏற்படும், 'சைலன்ட் ஹார்ட் அட்டாக்'கை, ஆறு மணி நேரத்திற்கு முன் கண்டுபிடிக்கும் புதிய கருவியை உருவாக்கியுள்ளார். இந்த படைப்பை பாராட்டி, 15ம் தேதி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, புதிய கண்டுபிடிப்புக்கான, 'ராஷ்டிரபதி நவப்ரவர்தன் புரஸ்கார்' என்ற தேசிய விருதை, ஆகாஷ் மனோஜுக்கு வழங்கி னார்.
டில்லி எய்ம்ஸ்மருத்துவமனையில், சோதனை முயற்சியாக, ஆகாஷ் மனோஜ் கண்டு பிடித்த கருவி மூலம், நோயாளிகளுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஆகாஷ் மனோஜ்கூறியதாவது: 'சைலன்ட் அட்டாக்' மிகவும் ஆபத்தானது.நல்ல முறையில் இருக்கும் நபரை கூட, திடீரென தாக்கி, சத்தமின்றி கொன்று விடும். என் தாத்தா, அப்படி தான் இறந்தார். அதன் பின் தான், 'சைலன்ட் அட்டாக்'கை கண்டறியும் முயற்சியில், தீவிரமாக ஈடுபட்டேன். ஒருவருக்கு, 'சைலன்ட் அட்டாக்' வரப்போகிறது என்பதை, அவரது மணிக்கட்டில் நான்தயாரித்த கருவியை வைத்து பார்த்தால், ஆறு மணி நேரத்திற்கு முன் தெரிந்து கொள்ளலாம்.'ஹார்ட் அட்டாக்' வந்த பின் சிகிச்சை செய்வதை விட, முன்கூட்டியே தெரிந்து, சிகிச்சை பெற்றால் செலவு குறைவு. நான் தயாரித்த கருவியை, ஜப்பான் நாட்டின் டோக்கியோ பல்கலையில், முதன் முதலில் காட்சிப்படுத்தினேன்.
அனுமதி : பெங்களூரில் உள்ள, ஐ.சி.எம்.ஆர்., என்ற இன்ஸ்டிடியூட் மூலம் ஆய்வு நடத்த, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள், 'சைலன்ட் அட்டாக்'கை கண்டறியும் கருவி விற்பனைக்கு வரும். இந்த கருவியை தயார் செய்ய, 900 ரூபாய் செலவாகும். இதே விலையில், மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்; தனியாருக்கு இதை வழங்கும் திட்டம் இல்லை.என் கருவியில், பரிசோதனை செய்த பிரதமர்மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர், என்னை பாராட்டினர். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...