'நீட் தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும்படி, தமிழகம் வைத்த
கோரிக்கையை ஏற்க இயலாது' என, மத்திய அரசு கூறிவிட்டதாக தெரிய
வந்துள்ளது. மருத்துவப் படிப்புக்கான சேர்க்கைக்கு, நாடு முழுவதும், ஒரே
மாதிரியான, 'நீட்' எனப்படும், நுழைவுத் தேர்வை நடைமுறைப்படுத்துவதில்,
மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
இந்த நீட் தேர்வின் காரணமாக, கிராமப்புற மாணவர்கள்,
பெரிதும் பாதிக்கப்படுவர் என, தமிழக அரசு கூறிவந்த நிலையில், இதிலிருந்து
விலக்கு பெறுவதற்கானநடவடிக்கைகளில் இறங்கியது.இது குறித்து, இரு
மசோதாக்களை, சட்டசபையில் நிறைவேற்றி, தமிழகத்துக்கு மட்டும் விதி விலக்கு
அளிக்க வேண்டுமென்ப தில், தீவிரம் காட்டியதோடு, பிரதமர் மற்றும் மத்திய
அமைச்சர்களிடம், நேரிலும், கடிதம் மூலமும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந் நிலையில், நீட் தேர்வு நெருங்கிவிட்டதால், இவ்விஷயம் குறித்து, மத்திய
அரசிடம் வலியுறுத்துவதற்காக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்விஜயபாஸ்கர்,
நேற்று டில்லிக்கு வந்திருந்தார்.மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்,ஜே.பி.
நட்டாவை, பார்லி., வளாக அலுவலகத்தில், காலை சந்தித்து பேசினார். அந்த
சந்திப்பின் போது, தமிழகத்துக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கும்படி
வலியுறுத்தப் பட்டது. ஆனாலும், 'இவ்விஷயத்தில், நாடு முழுவதும் ஒரே
மாதிரியாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறையில், மாற்றம் செய்வது
முடியாதகாரியம்.
தமிழக அரசின் மசோதாக்க ளுக்கு, சட்ட வடிவமும் இல்லாத நிலையில், விதி
விலக்கு அளிக்க இயலாது' என, அமைச்சர் நட்டா கூறிவிட்டதாக தெரிகிறது.
இச்சந்திப்புக்கு பின்,நிருபர்களிடம் பேசிய அமைச்சர்
விஜயபாஸ்கர்கூறியதாவது:இளநிலை படிப்புக்கு மட்டுமே, விலக்கு கேட்கி றோம்.
இதை, அரசிடம் தெளிவாக விளக்கினோம்; சட்ட சிக்கல் ஏதும் வர வாய்ப்பில்லை
என்பதையும், எடுத்துக் கூறினோம்.அனந்தகிருஷ்ணன் கமிட்டி தந்த அறிக்கையை
வைத்து, தமிழக அரசு கொள்கை முடிவை எடுத்துள்ளது. அரசு கல்லுாரிகளிலும்,
தனியார் கல்லுாரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு மட்டுமே, இந்த விலக்கு
தேவை.தமிழக அரசின் மசோதாக்களோடு, கூடுதல் விபரங்களையும் ஒப்படைத்து
உள்ளோம்.
எனவே, மத்திய அரசு பரிசீலிக்கும் என்றநம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர்
கூறினார்.பின், கூடுதல் முயற்சியாக, சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை,
தமிழக அமைச்சர் நேரில் சந்தித்துப் பேசினார்.103 மையங்களில் தேர்வு'நாடு
முழுவதும், இந்த ஆண்டு, 103 மையங் களில், 'நீட்' தேர்வு நடத்தப்படும்' என,
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்துள்ளார்.
டில்லியில், நிருபர்களிடம், அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்
கூறியதாவது:மருத்துவப் படிப்புக்காக, தேசிய அளவில், சி.பி.எஸ்.இ.,யால்
நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்கு, மாணவர்கள் பெருமளவில் ஆதரவு
தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு, 12 லட்சம் மாணவர்கள் எழுதுவர் என,
எதிர்பார்க் கப்படுகிறது. அதனால், தேர்வு மையங்களின் எண்ணிக்கையையும்
அதிகரித்துள்ளோம்.
கடந்த ஆண்டு, 80 மையங்களில் தேர்வு நடத் தப்பட்டது. இந்த ஆண்டு, 103
மையங்களில் நீட் தேர்வு நடத்தப்படும். தேர்வு மையங்களை மாணவர்கள் எளிதில்
அறிய, 'மொபைல் ஆப்' அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவக் கல்வியில் சேருவதற்கான, நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக் குமா
என்பதற்காக காத்திருக்காமல், மாணவர் கள் தேர்வுக்கு தங்களை தயார்படுத் திக்
கொள்ள வேண்டும்.பொன்.ராதாகிருஷ்ணன்மத்திய இணையமைச்சர், பா.ஜ.,
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...