கோவை, 'ஆசிரியர் தகுதித் தேர்வை, கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்' என்ற
கோரிக்கை எழுந்துள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதித்
தேர்வான, 'டெட்' ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது. இத்தேர்வை எழுத
காத்திருக்கும் பலர், தற்போது, தனியார் பள்ளிகளில், ஆசிரியர்களாக
பணிபுரிந்து வருகின்றனர்.தேர்வு காலம் என்பதால், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
வகுப்புகள் நடத்துவதிலும் மும்முரமாக உள்ளனர். இதனால், இவர்களால் மாலை வெகு
நேரத்திற்கு பின்பே, வீடு திரும்ப முடிகிறது; தேர்வுக்கு தயாராக நேரம்
கிடைப்பதில்லை.
குறிப்பாக, பெண் விண்ணப்பதாரர்கள், வீட்டு வேலையிலும் கவனம் செலுத்த
வேண்டியிருப்பதால், தினமும் ஒரு மணி நேரம் கூட, தேர்வுக்கு தயாராக
முடிவதில்லை.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் சிலருக்கோ, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், வேலையில் தொடர முடியும் என்ற நிலை.
இதனால், முழு நேர பயிற்சியில் ஈடுபட்டுள்ள, பிற தேர்வர்களுடன் போட்டியிட
முடியாமல் தவிக்கும் பெண் ஆசிரியர்கள், தேர்வை கோடை விடுமுறைக்கு தள்ளி
வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உள்ளனர்.
மேலும், 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள். பூர்த்தி
செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, தேர்வர்கள் வரிசையில் காத்து நின்றும்,
'ஜெராக்ஸ்' எடுக்க அலைந்தும் நேரத்தை வீணடிக்க வேண்டியதாயிற்று.
இதை தவிர்க்க, 'டி.என்.பி.எஸ்.சி., போல், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும்
நடைமுறையை, அடுத்தாண்டு முதலாவது அமல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையும்
எழுந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...