தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
தடை உத்தரவுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வீட்டு மனைகளை மறுபதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 2016ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதிக்கு முன்
வாங்கியிருந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்று தடை உத்தரவை
தளர்த்தியுள்ளது.
தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர் வைத்த கோரிக்கை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், பதிவு செய்யப்படும் நிலத்தில், சாலைக்கு 22 அடி இடம்
விட வேண்டும் என்ற விதியை மீறக் கூடாது என்றும் நீதிபதிகள்
தெரிவித்துள்ளனர்.
சாலை, கழிவுநீர் குழாய் பதிக்க போதிய இடம் வசதி இல்லாத
நிலங்களை முறைப்படுத்த போதிய கால அவகாசம் அளித்தும், அங்கீகாரமில்லாத
வீட்டு மனைகள் தொடர்பாக அரசின் கொள்கை முடிவை ஏப்ரல் 7ம் தேதிக்குள்
தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
வழக்கின் பின்னணி:
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த பொது நல மனு விவரம்: விவசாய விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு முறைப்படி அனுமதி கிடையாது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி விளை நிலங்கள் அனைத்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த பொது நல மனு விவரம்: விவசாய விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு முறைப்படி அனுமதி கிடையாது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி விளை நிலங்கள் அனைத்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர்.
இதனால் விளை நிலப்பரப்பு வெகுவாக குறைந்து விவசாயமும்
பாதித்துள்ளது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு இதுவும் முக்கியமான
காரணம். சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முறையற்ற முறையில் விளை
நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதுபோல
அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத்
துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு
முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி,
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், -விளை நிலங்களை வீட்டு மனைகளாக
-லே-அவுட்- போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த
நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டிடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்த
வித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது- என்று உத்தரவிட்டது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...