தொழிலாளர்
வருங்கால வைப்புநிதி (பி.எஃப்.) திட்ட ஓய்வூதியர்கள் தங்களது உயிர்வாழ்
சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 31 -ஆம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை முகப்பேர் பி.எஃப். மண்டல ஆணையர் வி.எஸ்.எஸ்.கேசவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் ஓய்வூதியதாரர்கள் தங்களது உயிர் வாழ்நாள் சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, வரும் 31 -ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அம்பத்தூர் மண்டலத்தின்கீழ் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள், ஆதார் சார்ந்த உயிர்வாழ் சான்றிதழை கால நீட்டிப்பு செய்யப்பட்ட தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காகித வடிவில் சமர்ப்பிக்கப்பட்ட உயிர்வாழ் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை ’மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர், ஆர்- 40ஏ1, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலக வளாகம், முகப்பேர், சென்னை-37'என்ற முகவரியிலும், 044 -2635 0080, 2635 0110, 2635 0120 என்ற தொலைபேசி எண்களிலும் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...