Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒரே மதிப்பெண்ணை பலர் பெற்றிருந்தால் காவலர் பணியிட தேர்வில் சீனியருக்கே முன்னுரிமை: சீருடைப்பணியாளர் குழுமம் அறிவிப்பு.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில்15,711 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஜன.23ல் அறிவிக்கப்பட்டது.
 இதன்படி சிறப்பு காவல்படை, ஆயுதப்படை, சிறைக்காவலர் உள்ளிட்டவற்றில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து, உடல்தகுதி, உடற்திறன் ஆகிய தேர்வின் அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படும்.எழுத்துத்தேர்வில் 80 மதிப்பெண், உடற்திறன் தேர்வில் 15 மதிப்பெண், என்சிசி, என்எஸ்எஸ், விளையாட்டு சான்றிதழ்களுக்காக 5 மதிப்பெண் வழங்கப்படும். எழுத்துத்தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண் பெற வேண்டும். இருப்பினும் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒரு பணிக்கு 5 பேர் என்ற விகிதத்தில், அடுத்தக்கட்ட தேர்வான உடல்கூறு அளத்தல், உடல்தகுதி, உடல்திறன் ஆகியவற்றுக்கு அழைக்கப்படுவர். இறுதியில் மொத்த உயர்ந்தபட்ச மதிப்பெண்கள் அடிப்படையிலும், பதவி விருப்ப முன்னுரிமை, வகுப்புவாரியான விகிதாச்சாரம் போன்றவற்றின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால், வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன்பின் மருத்துவ பரிசோதனை,தேர்வர்களின் குணநலன்கள், பழக்கவழக்கங்கள், காவல்துறை விசாரணைக்கும் உட்படுத்தப்படுவர் என்று தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் தெரிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive