ஆங்கிலத்தில் பேசினால் தமிழில் கேட்கும் ‘பேச்சுணரி தொழில்நுட் பத்தை’ (Speach recognition real-time translation technology) விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக இந்திய மொழித் தரவுகள் ஒருங் கிணைப்பு,
சேகரிப்பு ஆராய்ச்சி நிலையத் தலைவர் எல்.ராமமூர்த்தி தெரிவித்தார்.திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்துக்கு அண்மையில் வந் திருந்த அவர், ‘தி இந்து’விடம் கூறியதாவது: ‘‘மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் இந்திய மொழித் தரவுகள் சேகரிப்பு ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தை மொழிகளுக்குள் கொண்டு வரு வதுதான் இந்த மையத்தின் நோக்கம்.
22 இந்திய மொழிகளில்
அதற்காக மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து அங்கீகரிக்கப்பட்ட 22 இந்திய மொழிகளின் தரவுகளைக் கணினி மயமாக்குவதும், அதனை இயந்திர மொழிபெயர்ப்பு வாயி லாக ஒரு மொழியில் உள்ள இலக்கண, இலக்கியம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை மற்றொரு மொழியைப் பேசுவோரிடம் கொண்டு சேர்ப்பதையும் முக்கிய பணியாக இந்த அமைப்பு செய்து வருகின்றது.
அந்தவகையில் கணினியில் தட்டச்சு செய்யப்படும் வார்த்தைகளை, வேண்டிய மொழிகளில் மொழிபெயர்த்து தட்டச்சாகச் செய்வது போன்ற எழுத்துணரி தொழில்நுட்பத்தையும், பேசுகின்ற மொழியை தேவையான மொழி களில் மொழிபெயர்த்துக் கேட்பது (ஆங்கிலத்தில் பேசுவதை தமிழ் உட்பட அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் கேட்பது) போன்ற பேச்சுணரி தொழில்நுட்பத்தையும் உருவாக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.80 சதவீத தரவுகள் கணினிமயம்இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் 80 சதவீதம் தரவுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக தமிழ் மொழியில் பெரும்பான்மையான தரவுகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இன்னும் மூன்றாண்டுகளில் இந்த மூன்று மொழிகளிலும் பேச்சுணரி தொழில்நுட்பம் அறிமுகமாக வாய்ப்புள்ளது.இந்த தொழில்நுட்பம் முழுமை யாக நடைமுறைக்கு வந்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் எந்த மொழி தெரிந்தவர்களாக இருந்தாலும் பேச்சுணரி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தனது தாய் மொழியிலேயே பேசி விளக் கங்களைப் பெறமுடியும். உதார ணத்துக்கு, ரயில் நிலையத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத் தும்போது ரயில் எத்தனை மணிக்கு வரும், ரயில் எங்கு செல்கிறது போன்ற தகவல்களைத் தனது வட்டார மொழியிலேயே பேசி, கணினி வாயிலாக புரியவைத்து, தேவையான மொழியில் பதிலைப் பெறமுடியும்.300 பேருக்கு மேல் பயிற்சிஇந்தப் பணியை விரைவாக மேற்கொள்வதற்குத் தேவைப்படும் மொழியியலாளர்கள் குறைவாக உள்ளனர். தமிழ் மொழியில் மொழி யியலாளரை அதிகப்படுத்த தற் போது பயிற்சிகள் வழங்கப்படு கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர் களுக்கு இந்த பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.இவ்வாறு பயிற்சி பெற்றவர் களில் ஆர்வமிக்கவர்களுக்கு கூடுதலாகப் பயிற்சியளித்து, சிறந்த மாணவர்களை ஆராய்ச்சிமையத்தில் மொழித்தரவுகள் உருவாக்குதல் மற்றும் மொழி யியல் தொழில் நுட்பத்தை புகுத் தும் பணியில் பயன்படுத்தவுள்ளோம்’’ என்றார்.
விவசாயம் சுற்றுலாத் துறையில் விரைவில் அறிமுகம்
“இந்த பேச்சுணரியின் முன்னோட்டமாக ஓரிரு மாதங்களில் விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறையில் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளோம். விவசாயத் துறையில் உற்பத்திப் பொருட்களின் விலையை தொலைபேசியில் தினமும் அறிந்துகொள்ள விவசாயிகளுக்கு ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்படும். அதில், தனது தாய்மொழியில் பேசினால் அதைப் புரிந்துகொண்டு, பொருளின் விலையைச் சொல்லும் பேச்சுணரியாக அது செயல்படும். எனவே, தமிழ் மொழியைத் தேர்வுசெய்து படிப்போர் எதிர்காலத்தில் நல்ல மொழியியலாளராக வருவார்களேயானால் நல்ல எதிர்காலம் உள்ளது” என்றார் ராமமூர்த்தி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...