மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் சீரியல் எண்கள் இல்லாத
புதிய ரூ.500 நோட்டுகள் வந்ததால் ரூபாய் எடுக்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சி
அடைந்தனர்.
கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள்
செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து புதிய ரூ.500
நோட்டுக்கள் மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் வெளிவந்த நிலையில், ஏற்கனவே
ரூ.2000 நோட்டுக்கள் மீது சாயம் போனது உள்பட பல குற்றச்சாட்டுக்கள்
எழுந்தன.
இந்த நிலையில் இன்று காலை மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் இருந்து வெளிவந்த புதிய ரூ.500 நோட்டுக்களில் சீரியல் எண்களே இல்லை. இதனால் பணம் எடுத்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அதே நேரத்தில் இந்த நோட்டுக்கள் கள்ள நோட்டுக்கள் இல்லை என்றும், அச்சிடுவதில் தவறு ஏற்பட்டுள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். சீரியல் எண் இல்லாத நோட்டுக்களுக்கு பதிலாக வங்கி வேறு நோட்டுக்களை மாற்றித்தர சம்மதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...