ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து 90 சதவீத சேமிப்பை வீடு வாங்குவதற்காகத் திரும்பப் பெறக்கூடிய திட்டத்தை 4 கோடி சந்தாதார்கள் பெற்றுப் பயன்பெறலாம் என்று பாராளுமன்றத்தில் புதன் கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் வரும் வருங்கால வைப்பு நிதி கணக்கை பயன்படுத்தி வீட்டுக் கடன் மீதான ஈஎம்ஐ எனப்படும் மாதாந்திர தவணைகளையும் செலுத்தலாம்.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி புதிய திட்ட விதியின்படி ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி சந்தாதார்கள் கூட்டுறவுச் சங்கங்களில்10 உறுப்பினர்கள் கொண்ட கூட்டு அமைப்பாக இணைந்து இந்த அம்சங்களைப் பெறலாம் என்றும் கூறப்படுகின்றது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
இதற்காக அரசு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்ட விதி 1952-இல் 68பிடி என்ற புதிய பத்தியைச் சேர்க்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பாந்த்ரூ தத்தாத்ரேயா மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுச் சங்கங்கள்
மேலும் இது குறித்துப் பதில் அளித்துள்ள அமைச்சர் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக 10 பேர் கொண்ட உறுப்பினர்களாக வரும் போது வீடு வாங்க அல்லது ஏற்கனவே உள்ள வீட்டை புதுப்பிக்க 90 சதவீதம் வரை வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணமாகப் பெற முடியும்.

தவனை மற்றும் வட்டி
இந்தப் புதிய திட்டத்தின் மூலம் மாதாந்திர தவணையைத் திருப்பிச் செலுத்த மற்றும் அதன் வட்டியைச் செலுத்தவும் பிஎப் கணக்கை பயன்படுத்தலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிஎப் கணக்கில் பங்களிப்புகள்
2016 மார்ச் 31-ம் தேதி கணக்கின் படி ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கு சந்தாதார்களாக 17.14 கோடி பேர் உள்ளதாக அந்த அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2015-2016 நிதி ஆண்டில் மட்டும் 3.76 கோடி பேர் பிஎப் கணக்கில் பங்களிப்புகள் வந்துள்ளதாகவும் பாந்த்ரூ தெரிவித்தார்.

நிபந்தனைகள் உண்டு
பிஎப் கணக்கில் இருந்து இந்தத் திட்டம் மூலமாகப் பணத்தைத் திரும்பப் பெற பிஎப் சந்தாதார்கள் பரிந்துரைக்கப்படும் நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...