நீட் தேர்வுக்கு படிக்க ஆங்கிலம் மற்றும்
இந்தி மொழியில் மட்டுமே பாடப் புத்தகங்கள் உள்ளன. தமிழ் உள்ளிட்ட 8 மாநில
மொழி களில் பாடப் புத்தகங்கள் இல்லாத தால், தாய்மொழியில் தேர்வு எழுத உள்ள
மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார்
மருத்துவக் கல்லூரி கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் 50
ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த
மருத்துவப் படிப்பு களுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) வரும் மே மாதம் 7-ம்
தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட்
தேர்வுக்கு நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள்
விண்ணப்பித்துள்ளனர். தமிழகத் தில் மட்டும் 88 ஆயிரத்து 478 மாணவர்கள்
தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம்,
திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 103
நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.
நீட் தேர்வு கடந்த ஆண்டு ஆங்கி லத்தில்
மட்டும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு
கன்னடம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற
உள்ளன. ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் நீட் தேர்வுக்கு
படிப்பதற்கான பாடப் புத்தகங்கள் இருக்கின்றன. தமிழ் உள்ளிட்ட 8 மாநில
மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லை. இதனால் மாநில மொழிகளான தங்களுடைய
தாய்மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேண்டாம் நீட் தேர்வு
இது தொடர்பாக அரசு மருத்து வர்கள் மற்றும்
பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ - SDPGA) மாநில
அமைப்புச் செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம் கூறியதாவது:
நாடு முழுவதும் பல்வேறு பாடத்திட்டங்கள்
உள்ளன. நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில்
நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு படிப்பதற்கான சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள்
ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே உள்ளன. அப்படி இருக்கும் போது,
தமிழ் உள்ளிட்ட மாநில மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள
மாணவர்களால் எப்படி தேர்வுக்கு தயாராக முடியும். படிப்பதற்கு பாடப்
புத்தகங்களே இல்லாமல், தமிழில் தேர்வு எழுதலாம் என்று சொல்வதில் என்ன
நியாயம் இருக்கிறது. நீட் தேர்வால் மாநில மொழிகளில் தேர்வு எழுத உள்ள
கிராமப்புற, ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி
மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஒரே மாதிரியான
பாடத்திட்டத்தை கொண்டு வந்த பிறகு நீட் தேர்வை நடத்த வேண்டும். நீட்
தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...