Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பட்டதாரி மாணவர்கள் கல்விக் கட்டணம் ரத்து திட்டத்துக்கு ரூ.680 கோடி ஒதுக்கீடு

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யும் திட்டத்தை 2017-18 ஆம் ஆண்டிலும் செயல்படுத்த ரூ. 680 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வியில் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து உயர் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்தை அரசே திரும்ப வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் 2016-17-ஆம் ஆண்டில் 2.29 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 2017-18 ஆம் ஆண்டிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 680 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயர் கல்வித் துறைக்கு ரூ.3,680 கோடி: அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்பட அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மானியம் வழங்குவதற்காக ரூ. 320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில் உயர் கல்வித் துறைக்காக 2017-18 நிதிநிலை அறிக்கையில் ரூ. 3,680 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.165 கோடி: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ.165 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மாணவர் உணவுக் கட்டணம் உயர்வு: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆதிதிராவிடர் விடுதி கல்லூரி மாணவர்களுக்கான மாத உணவுக் கட்டணம் ரூ. 875-லிருந்து ரூ. 1,000-ஆக உயர்த்தப்படுகிறது. அதுபோல ஆதிதிராவிடர் பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணம் ரூ.755-லிருந்து ரூ.900-ஆக உயர்த்தப்படுகிறது. மேலும் இந்த விடுதிகள் அனைத்துக்கும் சொந்த கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது 30 விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. 2017-18-ஆம் ஆண்டில் ரூ.30.73 கோடியில் 24 கூடுதல் விடுதிகள் கட்டப்படும்.
மொத்தத்தில் கட்டடங்கள் கட்ட ரூ.189 கோடியும், உணவுக் கட்டணங்களுக்காக ரூ. 120 கோடியும் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
உதவித் தொகை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளிக் கல்வி உதவித் தொகைக்கென ரூ. 125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அதுபோல உயர் கல்வி பயிலும் இந்தப் பிரிவு மாணவர்களின் உதவித் தொகை திட்டத்துக்கென ரூ.1,580 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive