இது ஆண்டுக்கு 20 லட்சம் மனித ஆற்றல் இழப்புக்குச் சமம் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். என்ஜினியரிங் படித்த 60 சதவித மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று
தொழில் நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் உள்ள தொழில் நுட்பக் கல்லூரிகளிலில்
படித்துவிட்டு 8 லட்சம் மாணவர்கள் வெளியேறுகிறார்கள். இவர்களில் சுமார் 5
லட்சம் பேருக்கு பணிவாய்ப்பு கிடைப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில் நுட்பக் கல்லூரிகளில் வழங்கப்படும் பாடத்திட்டங்களில்
மிகப்பெரிய அளவில் தர வேறுபாடு இருப்பதால், தரமில்லாத கல்லூரிகளிலில்
படித்துவிட்டு வெளிவரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் உள்ளது.
இதனால் தொழில் நுட்ப பாடத்திட்டங்களை மேம்படுத்த மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...