Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

5-ஆம் வகுப்பு மாணவன் தன் பெயரை கூட எழுத தெரியாத அளவிற்கு கல்வி உள்ளது: ஹைகோர்ட் நீதிபதி வேதனை

ஐந்தாம் வகுப்பு மாணவன் தன் பெயரை கூட எழுத தெரியாத அளவிற்கு கல்வி இருப்பது வேதனையகவுள்ளது என்று நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார். ஆசிரியர்களின் தரம் மிக மோசமாக உள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் காளான்கள் போல் முளைத்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். எந்த கொள்கையும் இன்றி பிஎட், எம்எட் கல்வி நிறுவனங்களுக்கு எந்திரங்கள் போல் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதகாவும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி எஸ்விஐ கல்லூரி தொடுத்த வழக்கில் நீதிபதி கிருபாகரன் சரமாரியாக விளாசியுள்ளார். நாடு முழுவதும் எத்தனை பி.எட், எம்.எட் பயிற்சிக் கல்லூரிகள் இருக்கின்றன என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பயிற்சி பெற்ற மாணவர்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வரும் 27 ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
நடப்பு ஆண்டில் ஆசிரியர் பயற்சி வகுப்பில் அதிக மாணவர்களைச் சேர்க்கக் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லெட்டர் பாட் கல்வி நிறுவனங்கள் பெருக்கத்தால் தரமான ஆசிரியர்கள் உருவாவதில்லை என்றும் கல்வித் தரம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நீதிபதி கிருபாகரன் குற்றம் சாட்டியுள்ளார். மாணவர்கள் கல்வி குறைபாட்டுக்கு ஆசிரியர்கள் தரம்மில்லாததுதான் காரணம் என்றும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.




1 Comments:

  1. Yes. .....correct. .Even 10 th standard student don't know how to fill a reservation form in Tamil

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive