கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் அனைத்து பிரிவுகளிலும்
சுமார் 388 வீரர்கள் வரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என பாதுகாப்புத்துறை
இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த அமைச்சர் கூறியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் தரைப்படை, விமானப்படை கப்பல்படை ஆகிய மூன்று பிரிவுகளிலும் சுமார் 348 வீரர்கள் வரை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக தரைப்படையில் 276 பேரும், விமானப்படையில் 60 பேரும், கப்பல் படையில் 12 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வீரர்களின் தற்கொலையை தடுப்பதற்கு தேவையான கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் தரைப்படையில் 8 ஆயிரத்து 370 அதிகாரிகளும், 35 ஆயிரத்து 174 வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கப்பல் படையில் ஆயிரத்து 322 அதிகாரிகளும், 10 ஆயிரத்து 982 வீரர்களும், விமானப்படையில் 29 அதிகாரிகளும், 9 ஆயிரத்து 841 வீரர்களும் பற்றாக்குறை உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...