Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

32 ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 6 அமேசானில் விற்பனைக்கு வந்தது


ஐபோன் 6 ஸ்மார்ட்போன் 16, 64 மற்றும் 128 ஜிபி மாடல்களை மட்டுமே ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்நிலையில் 32 ஜிபி ஐபோன் 6 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. தற்சமயம் இந்தியாவில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ள ஐபோன் 6 விரைவில் மற்ற சந்தைகளிலும் கிடைக்கும். 
அமேசான் தளத்தில் 32 ஜிபி ஐபோன் 6 ஸ்பேஸ் கிரே நிறம் கொண்ட மாடல் ரூ.28,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.8550 வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. இச்சலுகை எக்சேஞ்ச் செய்யும் போது வழங்கப்படுகிறது. 
ஆப்பிள் உறுதி செய்துள்ள 32ஜிபி ஐபோன் 6 இந்தியா மட்டுமின்றி தைவானிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதே மாடல் ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் சீனாவிலும் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் வரை அமேசான் தளத்தில் மட்டும் 32 ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 6 பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை ஐபோன் 6 ஸ்மார்ட்போனில் 4.7 இன்ச், 750x1334 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஐஓஎஸ் 10, ஏ8 பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 எம்பி பிரைமரி கேமரா, 1.2 எம்பி செல்ஃபி கேமரா, ப்ளூடூத் 4.0, 1810 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive