ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின், இலவச சேவை வரும் மார்ச்31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதற்குப் பிறகு, மற்ற நிறுவனங்கள் போல பணம் செலுத்திதான் ஜியோ சேவையை
அனுபவிக்க முடியும். இதையடுத்து, ஜியோ நிறுவனம் தனது கட்டண சேவை பற்றிய
விவரங்களை வெளியிட்டுள்ளது.
ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் 99 ரூபாய் கட்டணம் செலுத்தி
'ரிலையன்ஸ் ஜியோ ப்ரைம் சப்ஸ்கிரிப்ஷன்' செய்ய வேண்டும். இந்த
சப்ஸ்கிரிப்ஷன் வேலிடிட்டி 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை இருக்கும்.
இது தவிர, வேண்டிய மாதாந்திர பேக்குகளை பயன்படுத்தி ஜியோ சேவையை தொடரலாம்.
தற்போது, 303 ரூபாய்க்கு ஜியோ வெளியிட்டுள்ள பேக்கிலேயே 28
நாட்களுக்கு இன்டர்நெட் முதல் அனைத்து சேவைகளும் அன்லிமிடெடில்
கிடைக்கிறது. இந்த பேக்கின் மூலம் 1GB இன்டர்நெட் பயன்படுத்திய பிறகு,
பேண்ட்வித் வேகம் குறைக்கப்படும். மேலும், விபரங்களை ஜியோ இணையதளத்தின்
மூலம் அறியலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...