Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படும் ஜியோ இலவச சேவைகள்.?

 ரூ.99 - க்கு  ஜியோ ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்...?

ஜியோ பிரைம்  திட்டத்தை தொடர்ந்து பெற ரூபாய் 99 கு, வரும் 31 ஆம் தேதிக்கும் ரீசார்ஜ் செய்ய  வேண்டும். ஒரு வேளை ரீசார்ஜ் செய்ய மறந்தாலோ அல்லது ரிலையன்ஸ் ஜியோ சேவையை  பெற விருப்பம் இல்லாமல் ரீசார்ஜ் செய்யாமல் விட்டுவிட்டால், எப்பொழுது உங்களது அழைப்புகள் துண்டிக்கப்படும் என்பதை பார்க்கலாம்  .
ரூ.99 - கு ரீசார்ஜ் செய்து விட்டு,  அடுத்து வரும் சில மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யாமலே  இன்கமிங்  மற்றும் அவுட்கோயிங் கால்ஸ் பெற  நினைத்தால், குறிப்பிட்ட சில நாட்களுக்கு பின்  அழைப்பு துண்டிக்கப்படும் .
பொதுவாகவே 9௦ நாட்கள் வரை  ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால், தானாகவே  ஜியோ சேவை  துண்டிக்கப்படும். மேலும் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வில்லை என்றாலும் சேவை துண்டிக்கப் படும்.
ஜியோ பிரைம் திட்டத்திற்கு  ரீசார்ஜ்  செய்யாமல், மற்ற சலுகைகளை பயன்படுத்த முடியும். ஆனால் பிரைம் திட்டத்திற்கு வழங்கப்படும் சலுகையை போல், மற்ற திட்டத்திற்கான  சலுகையில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு, ஜியோ சேவையே வேண்டாமென்றாலும், செபி விதிமுறைகளின்  படி, ஜியோ சேவை  தானாகவே துண்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



ஆனால்???


எதிர்பார்த்த அளவிலான பயனர்கள் ஜியோ ப்ரைம் உறுப்பினராக மாறவில்லை என்பதால நிறுவனம் ஏமாற்றம் அடைந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஹேப்பி நியூ இயர் ஆபர் ஆனது மார்ச் 31-ஆம் தேதி முடிவுக்கு வரவுள்ள ஒரு நெருக்கமான நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் அனைவரும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் ரிலைஸ்ன் ஜியோவின் ப்ரைம் மெம்பராக மாற வேண்டும் என்ற நிலையில் தற்போது "கெடு நாள்" சார்ந்த புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

சுமார் ரூ.10/- என்ற விலை நிர்ணயத்தில் 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா சலுகை என்பது மிகவும் இலாபகரமான ஒரு திட்டமாக தெரிகிறது என்றாலும் கூட இன்னும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஜியோ ப்ரைம் சேவையில் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை.

காலக்கெடு நீட்டிக்கப்படலாம்

இதன் விளைவாக வெளியான தகவலில் எதிர்பார்க்கப்பட்ட அளவிலான பயனர்கள் ப்ரைம் சேவையில் இணையவில்லை என்பதால் ப்ரைம் மெம்பர்ஷிப் பெறும் காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

www.kalvichudar.com

22-27 மில்லியன் பயனர்கள்

தற்போது வரை 100 மில்லியன் பயனர்களை கொண்டுள்ள ஜியோ நிறுவனத்தின் ப்ரைம் சேவைக்கு வெறும் 22-27 மில்லியன் பயனர்கள் மட்டுமே ப்ரைம் உறுப்பினர்களாகி உள்ளன.

முடிவு

மார்ச் 31-ஆம் தேத்திகுள் 50% பயனர்கள் ப்ரைம் சேவைக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்த்த ஜியோ நிறுவனம் ஏமாற்றம் அடைந்துள்ளதால் இந்த காலக்கெடு நீட்டிப்பு முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.

ஏப்ரல் 30-ஆம் வரை....

இந்நிலையில் ப்ரைம் சேவைக்குள் இணையும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டால், எடுத்துக்காட்டுக்கு 1 மாத காலம் நீடிக்கப்பட்டால அதுவரையிலாக அதாவது ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி வரையிலாக ஜியோ வழங்கிய இலவச சேவைகள் தொடருமா என்பதை அதிகார்ப்பூர்வமான அறிவிப்புகளுக்கு பின்னரே அறியப்படும்.

மறுபக்கம்..

இதுநாள் வரை இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவைகளை அள்ளியள்ளி வழங்கிய ரிலையன்ஸ் ஜியோவின் இலவச விளம்பர சேவைகளானது மார்ச் 31-ஆம் தேதியோடு முடிவுக்கு வரவும் - இந்த இடத்தில் இருந்து அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் அழிவு காலம் ஆரம்பமாகிறது என்கிறார்கள் வல்லுநர்கள். ஏன் அவர்கள் அப்படி கூறுகிறார்கள்.? ஒருவேளை அது நிஜமென்றால் அதற்கு காரணிகள் என்னவாக இருக்கும்.?

போராடி வருகின்றனர்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மூலம் நான்காவது தலைமுறை லாங்-டேர்ம் எவல்யூஷன் (4G-LTE) நெட்வொர்க்கின் கீழ் தரவு மற்றும் குரல் சேவைகளை வழங்க தொடங்கியதிலிருந்து பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலார் மற்றும் இதர சேவை வழங்குநர்கள் தங்கள் நிதிநிலைகளை தக்கவைத்துகொள்ள போராடி வருகின்றனர்.

வலி மிகுந்த ஒரு காலம்

ஜியோ சேவைகளின் வணிக ரீதியிலான அறிமுகப்படுத்தலின் போது, ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேலாக அனைத்து விடயங்களும் ஒரு நிலையான மற்றும் நிதிநிலைப்பாடு கொண்டிருக்கும் என்று அம்பானி நம்பிக்கை தெரிவித்திருந்தார், உடன் இந்த தொலை தொடர்பு துறை வலி மிகுந்த ஒரு காலத்தை கடந்து கொண்டிருக்கிறது, ஆனால் அது இறுதியில் பல நல்ல விடயங்கள் வெளிவரும்' என்றும் அவர் கூறியிருந்தார்.

எழுச்சி அடையும் அதே நேரத்தில்

இதனையெல்லாம் ஆராய்ந்த பெங்களூரை சேர்ந்த தொலைத் தொடர்பு ஆய்வாளர் ஆன ஜி கிருஷ்ண குமார் ஜியோ நிறுவனம் ஆனது தொலைத்தொடர்பு துறையில் எழுச்சி அடையும் அதே நேரத்தில் தரவு சந்தை தீவிரப்படுத்தும் போட்டியை தொடர்ந்து நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.

மெல்ல மெல்ல...

மேலும் அவர் ஜியோவின் இலவச சேவைகள் முடிவடைந்து எப்போது அது கட்டண சேவையாக உருவெடுக்கிறதோ அன்று முதல் மெல்ல மெல்ல வாடிக்கையாளர்களை இழக்கும். இன்னும் சொல்லப்போனால் தற்போதைய பயனர்களை தக்கவைத்துகொள்ள போராடலாம் என்று கூறியுள்ளார்.

50% - 60% பயனர்கள்

அதாவது கிருஷ்ண குமாரின் கணிப்புப்படி, ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து, வர்த்தக ரீதியிலான ரிலையன்ஸ் ஜியோவின் 50% - 60% பயனர்கள் சேவையில் இருந்து தங்களை விலக்கி கொள்வார்கள் என்கிறார். இந்திய சூழலில் பெரும்பாலான பயனர்கள் ப்ரீபெய்ட் பயனர்கள் ஆவர் மற்றும் இந்த பிரிவின் கீழ் இருக்கும் பயனரின் சராசரி வருவாய் (Arpu) ரூ.100 -130/- என்பதை சுற்றி உள்ளது. ரூ.300/- என்ற ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் கட்டண சேவையோடு ஒப்பிட்டால் எத்தனை பேர் இந்த சேவையை அணுகுவார்கள் என்பது கேள்வி குறித்தான் என்கிறார் கிருஷ்ண குமார்.

இலவச சேவை என்பதால்

மேலும் வெளிப்படையாக 'ஜியோ ஒரு இலவச சேவை என்பதால் தான் மக்கள் அதில் குவிந்துள்ளனர். அது கட்டண சேவையாக மாறியதும் இந்த நெட்வொர்க்கில் இருக்கும் 50% -60% வெளியேறுவார்கள் என்று நான் நம்புகிறேன்' என்று குமார் கூறியுள்ளார். இன்று இந்தியாவில் உள்ள மொபைல் பயனர்களில் 96% ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் ஆவர். ஜியோவின் இந்த ரூ.3030 பிளான் ஆனது சந்தாதாரர்களை ஈர்க்க முயற்சிக்கும் ஆனால் நெட்வொர்க்கின் குரல் அழைப்பு தரம் மோசமாக இருப்பதால் மொபைல் போர்டர்களை ஈர்க்க முடியாமல் போகலாம் என்றும் குமார் கூறியுள்ளார்.

4% மட்டுமே

அவரை பொறுத்தவரை, ஜியோ சேவையானது சராசரி வருவாயாக (Arpu) ரூ.490/- கொண்டுள்ள போஸ்ட்பெயிட் பயனர்களை மட்டுமே ஈர்க்க முடியும்., அதாவது 4% இந்திய பயனர்களை மட்டுமே ஈர்க்க முடியும் என்கிறார்.


சில சதவீதம் குறைந்தால்

பெயர் குறிப்பிட விரும்பாத மற்றோரு ஆய்வாளர், ஜியோ மொபைல் தரவு பயன்பாடானது அதன் போட்டியாளர்களை விட ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கிறது என்பதால், அதன் விலையும் சில சதவீதம் குறைந்தால் நல்ல வரவேற்பை பெறலாம் என்று கூறியுள்ளார்.

ஜியோ பயனர்கள்

போட்டியாளர்களின் சந்தாதாரர்கள் 1ஜிபிக்கும் குறைவான டேட்டா செலவை மேற்கொள்ள ஜியோ வாடிக்கையாளர்களோ 3 - 4 ஜிபிக்கும் அதிகமாக தரவு பயன்பாடு கொண்டு இயங்குகின்றன. அது கடந்த மாதம் 6 ஜிபிக்கு சென்றது. எனவே ஜியோ பயனர்கள் அதே 6 ஜிபி தரவு பயன்பாட்டை கட்டண சேவையாக பெறும்போதும் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன், ஏனெனில் பிற சேவைகளோடு இந்த விலை (ரூ.303/-) குறைவாக உள்ளது என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive