பள்ளிக்கல்வியில் காலியாக உள்ள, 3,000
ஆசிரியர் பணியிடங்களை தாமதமின்றி நிரப்ப வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர், சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது: தமிழகத்தில், 30 கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகள்; 50க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங் களும் காலியாக உள்ளன. அதனால், பொதுத் தேர்வு பணிகளை ஒருங்கிணைப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், 145 இடங்களில் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில், பொறுப்பு பணிகளில் நியமிக்க, 100 அதிகாரிகளே உள்ளனர்; 45 அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது. எனவே, இனியும் தாமதிக்காமல், காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளிக்கல்வியில், 3,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றையும் தாமதமின்றி நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
computer science is also a subject. kindly anybody consider the computerscience with b.ed members have any post in school? is it possible. i expect answer for last 14 years .........
ReplyDelete