இதன் மூலம் தமிழகத்தில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறும்.
ஆனால் இந்த ஆண்டு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதால், போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது.
5 வயதுக்குட்பட்டவர்கள்: தமிழகத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணையாக ஏப்ரல் 2-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
43 ஆயிரம் மையங்கள்: ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என முக்கியமான இடங்களில் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்படும். மேலும் முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் சுமார் 1,500 நகரும் மையங்கள் நிறுவப்படும்.
தொலை தூரம், எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் 1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்கப்படும். இந்தப் பணிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது:
தமிழகம் போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். எனவே அனைத்து தாய்மார்களும் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறும் என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...