Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இப்படியா டஃப்பா கேப்பாங்க.. +2 பிசிக்ஸ் மாணவர்கள் குமுறல்... சென்டம் குறையும் அபாயம்!

 தமிழகம் முழுவதும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கியது. தொடர்ச்சியாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.         இந்த 12ம் வகுப்புத் தேர்வு மார்ச் 31ம் தேதி வரை நடைபெறும். தேர்வுகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயை நெருங்கி வரும் நிலையில் சில தாள்கள் கடினமாக அமைந்திருப்பது மாணவர்களை அதிர வைப்பதாக உள்ளது. முதலில் கணிதம் கஷ்டமாக இருந்தது. தற்போது இயற்பியல் கடினமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
12ம் வகுப்பு பொதுத் தேர்வு 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நேற்யை தினத்தில் 21.03.2017ம் தேதி இற்பியல் மற்றும் பொருளியல் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்தன. 12ம் வகுப்பு இயற்பியல் தேர்வினை தமிழகத்தில் 6 லட்சத்து 1595 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளார்கள். மற்றும் பொருளியல் தேர்வினை தமிழகத்தில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 898 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர். சென்டம் கனவு கலைந்தது 12ம் வகுப்பு இயற்பியல் தேர்வில் ஒன் மார்க் கேள்வியில் ஏற்பட்ட குழப்பத்தினால் சென்டம் கனவு கலைந்தது என மாணவர்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர். 3 ஒன் மார்க் கேள்விகள் மிகக் கடினமாக அமைந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஒன் மார்க் கேள்வியில் இருந்த சிறிய பிழையே மாணவர்களின் பெரிய கனவைக் கலைத்தது. கணக்கீட்டில் குளறுப்படி இயற்பியல் தேர்வில் அ வரிசையில் உள்ள 24வது கேள்வியே ஆ வரிசையிலும் 30வது கேள்வியாக கேட்கப்படப்பட்டிருந்தது. அதிலுள்ள கணக்கீட்டில் ஆங்கில எழுத்தில் பெரிய ஏ எனக் குறிப்பிட பட வேண்டிய இடத்தில் சிறிய ஏ எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பெரிய ஏ - சிறிய ஏ பெரிய ஏ மற்றும் சிறிய ஏ இரண்டையும் பயன்படுத்தி மாணவர்கள் கணக்கு செய்யும் போது வேறு வேறு பதில்கள்தான் வரும். ஆனால் அதில் இரண்டு இடத்திலேயும் ஆங்கில எழுத்தில் பெரிய ஏ தான் வந்திருக்க வேண்டும். இந்த சிறிய குளறுபடியினால் மாணவர்கள் மனக்குமுறலுக்குள்ளானார்கள். சென்டம் குறையும் இந்தக் குழப்பத்தால் இந்த முறை சென்டம் அதாவது 200க்கு 200 வாங்கும் வாய்ப்பு குறையும் என்று ஆசிரியர்கள், மாணவ மாணவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.




3 Comments:

  1. Please check not big A...but big C....

    ReplyDelete
  2. Maths exam finished? 27.03.17 only maths exam. Kindly give correct details.

    ReplyDelete
  3. கணிதத்தேர்வு நடைபபெறவில்லை 27/03/17 கணிததேர்வு

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive