பிளஸ்
2 பொதுத்தேர்வில், நேற்று வணிகவியல், புவியியல் மற்றும் மனை அறிவியல்
பாடங்களுக்கு, தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள்கள் எளிமையாக இருந்ததாக,
மாணவர்கள் தெரிவித்தனர். வணிகவியல் தேர்வில், பி பிரிவில், 41வது
கேள்வியாக, தரவரிசை கோட்பாடு பற்றி கேட்கப்பட்டிருந்தது. நான்கு
மதிப்பெண்ணுக்கான இந்த கேள்வியில், தரவரிசையில், கூடுதலாக, 'ச்'
சேர்க்கப்பட்டு, வினாத்தாள் பிழையாக இருந்தது.
ஆனாலும், மாணவர்கள் பிழையை தெரிந்து கொண்டு, கேள்வியை சரியாக புரிந்து பதில் எழுதினர். வினாத்தாள் குறித்து, வேலுாரை சேர்ந்த, வணிகவியல் ஆசிரியரும், தொழிற்கல்வி ஆசிரியர் கழக நிர்வாகியுமான, ஜனார்த்தனன் கூறுகையில், ''பிளஸ் 2 தேர்வு வினாத்தாளில் பிழைகள் இருக்கக் கூடாது. எதிர்காலத்தில், இந்த பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும்,'' என்றார்.இதற்கிடையில், நேற்றைய தேர்வுகளில், 14 பேர் முறைகேடு புகாரில் பிடிபட்டதாக, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...