புதுடில்லி, :நாடு முழுவதும், 23 பல்கலைகள் மற்றும் 279 தொழில்நுட்பக்
கல்லுாரிகள், அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு கல்வி ஆண்டு துவக்கத்துக்கும் முன், நாட்டில் உள்ள போலி பல்கலைகள்
மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிகள் குறித்த விபரங்களை, யு.ஜி.சி.,
எனப்படும், பல்கலை மானியக் குழுவும், ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும்,
அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் வெளியிடுகின்றன.
சான்றிதழ் கிடைக்காது
அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான பட்டியலை இவை வெளியிட்டுள்ளன. நாடு
முழுவதும், 23பல்கலைகளும், 279 தொழில்நுட்பக் கல்லுாரிகளும் அனுமதி பெறாமல்
இயங்கி வருகின்றன. இவற்றில் படித்தால், அங்கீகாரம் பெற்ற கல்விச்
சான்றிதழ் கிடைக்காது என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இந்த பட்டியலில், 66 போலி கல்லுாரிகள் மற்றும் 23 போலி பல்கலைகளுடன்,
டில்லி முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடத்தில், தெலுங்கானா, உத்தர
பிரதேசம், மேற்கு வங்கம், மஹாராஷ்டிர மாநிலங்கள்உள்ளன.
கடிதம்
'இந்த போலி கல்லுாரி, பல்கலைகள் குறித்து, அந்தந்த மாநிலங்களுக்கு தகவல்
கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், உரிய அனுமதியை பெறும்படி, இந்த கல்வி
அமைப்புகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது' என, யு.ஜி.சி.,
தெரிவித்துள்ளது.
போலி கல்வி நிறுவனங்கள் குறித்த தகவலை,www.ugc.ac.in மற்றும்
www.aicte-india.org இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்றும், யு.ஜி.சி.,
தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...