சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் நாடுகளின்
பட்டியலில் இந்தியாவிற்கு 25வது இடம் கிடைத்துள்ளது.
நாட்டின் மொத்த
உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் தொடர்பான உள்நாட்டு உற்பத்தி, மக்கள்தொகை
உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், சர்வதேச அளவில் சிறந்து விளங்கும்
நாடுகளின் பட்டியலை, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைகழகம், முன்னணி
நிறுவனமான பிஏவி கன்சல்டிங் நிறுவனத்துடன் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தி
வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் 36 நாடுகளில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நாடுகளின் பட்டியலில், இந்த ஆண்டே அறிமுகம் ஆகியுள்ள சுவிட்சர்லாந்து நாடு, பட்டியலில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளது.
2016ம் ஆண்டு பட்டியலில் 4ம் இடத்தில் இருந்த அமெரிக்கா, இந்தாண்டு பட்டியலில், 3 இடங்கள் பின்தங்கி 7வது இடத்தில் உள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பிலும், தனிநபர் அடிப்படையிலான உள்நாட்டு உற்பத்தி 6,187 அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பின் அடிப்படையில், சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 25வது இடம் கிடைத்துள்ளது.
சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில்
சுவிட்சர்லாந்தும், கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், சுவீடன்,
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நார்வே நாடுகள் பட்டியலின் முதல் 10
இடங்களில் உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...