பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட காலத்தில் வங்கி கணக்குகளில் ரூ 1 கோடி
மற்றும் அதற்கு மேல் டெபாசிட் செய்த 200 பேருக்கு வருமான வரித்துறை
நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாட்டில் புழக்கத்தில் இருக்கும் கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பணமதிப்பழிப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டது. இதையடுத்து கருப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் மீதும், வங்கிகளில் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக டெப்பாசிட் செய்தவர்கள் மீதும் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வங்கிகளில் கருப்பு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதா என கண்டறிய, 2 கட்ட ஆய்வுப்பணியை ஆப்ரேஷன் கிளீன் மணி என்ற பெயரில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு 1 கோடி மற்றும் அதற்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்த சுமார் 200 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒருவரே தனக்கு பல்வேறு வங்கிகளில் உள்ள கணக்குகளில் டெபாசிட் செய்திருந்தாலும், அவற்றை கண்டுபிடித்து மொத்த டெபாசிட் எவ்வளவு என கணக்கிடப்படுகிறது. மேலும் இந்த பணம் அவர்களுக்கு எவ்வாறு வந்தது என்ற விளக்கம் கேட்கப்படுகிறது.
அளவுக்கு அதிகமாக டெபாசிட் செய்தவர்களின் கணக்குகளை ஆய்வு செய்வதற்காக 2 பெரிய நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. . பணமதிப்பழிப்பு அறிவிப்புக்கு முன்பு மற்றும் அதற்கு பிறகும் மேற்கொள்ளப்பட்ட டெபாசிட் தொகைகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
முன்னதாக சந்தேகத்துக்கிடமாக 18 லட்சம் பேரின் வங்கிக் கணக்குகளில் ரூ.4.17லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு 13லட்சம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...