தமிழகம் முழுவதும், பிளஸ் 2 தேர்வுகள், நாளை துவங்குகின்றன. முறைகேடுகளை தடுக்க, 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும், அரசு, தனியார் பள்ளிகள் என, 2,427 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், 6,737 பள்ளிகளைச் சேர்ந்த, நான்கு லட்சத்து, 17 ஆயிரத்து, 952 மாணவர்கள்; நான்கு லட்சத்து, 80 ஆயிரத்து, 810 மாணவியர் மற்றும் ஒரு திருநங்கை எழுதுகின்றனர். இவர்கள் தவிர, 500 பேர், 'தத்கல்' எனப்படும், விரைவு முறையில் விண்ணப்பம்
செய்தவர்களும் தேர்வு எழுத உள்ளனர்.மேலும், 20 ஆயிரத்து, 448 ஆண்கள், 11 ஆயிரத்து, 392 பெண்கள், மூன்று திருநங்கையர் என, தனித்தேர்வர்களும், சென்னை புழல் சிறையில், 88 கைதிகளும் என, ஒன்பது லட்சத்து, 30 ஆயிரத்து, 606 பேர் தேர்வில் பங்கேற்கின்றனர்
தமிழைப் பயிற்றுமொழியாக கொண்ட, ஐந்து லட்சத்து, 69 ஆயிரத்து, 304 பேர் தேர்வில் பங்கேற்கின்றனர்l தேர்வு மையங்கள் மற்றும் வினாத்தாள், விடைத்தாள் கட்டுகளை பாதுகாக்க, 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்; ஒவ்வொரு தேர்வு மையத்திலும், இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர்.அரசு, தனியார் பள்ளித் தேர்வு மையங்களில், மின் பிரச்னை ஏற்படாமல் இருக்க, 2,500 மின் ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பர். அனைத்து தேர்வு மையங்களிலும், உதவி பொறியாளர் தலைமையில், தடையில்லா மின்சாரம் வழங்க, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிந்ததும், ஐந்து மையங்களுக்கு, ஒரு மொபைல் குழு என, 500 குழுக்கள் அமைத்து, வினாத்தாள் வழங்கல் மற்றும் விடைத்தாள் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது .தேர்வு மையங்களுக்கு குடிநீர் வசதி வழங்க, உள்ளாட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 32 அதிகாரிகள் கொண்ட மேற்பார்வை குழுவினர், தேர்வுப் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...